Sunday, July 26

“மம்மட்டியான் ஸ்டார்ஸ் ” வெப் தொடர் விமர்சனம்.

எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் “மம்மட்டியான் ஸ்டார்ஸ்” வெப் தொடரை ஜீ5 தளத்திற்காக ஆறு எபிசோடுகளாக இயக்கியுள்ளார் சவிர் சுதாகர்,ஒளிபதிவு பி.எம். ராஜ்குமார் , எடிட்டர் ;பவித்ரன் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி  ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா,நான் கடவுள் ராஜேந்திரன் விவேக் பிரசன்னா, சம்பத்ராம் நடிக்கும் ஜூன் 26 முதல் ஜீ5ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

கதைகரு
கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்கள், தங்களின் அபிமான கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை..

வெப்தெடரை பார்ப்போம்;

ஊரில் இனணபிரியாத மூன்று நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து நடத்தும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்”,கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி  வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க முடிவு செய்கிறார்கள் அதற்கான சென்னை பயணம் டிக்கெட், வழி செலவுகள் பணம் தேவை இவர்களிடம்  பணம் இல்லை ஒரு திட்டம் போடுகிறார்கள் ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் தொகை கிராம அலுவலகத்தில்  திருடுகிறார்கள் சென்னையில் நண்பர் மூலம் கிரிக்கெட் போட்டி பார்க்க டிக்கெட் வாங்கி சென்னைக்கு பயணம் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி , ஜகபர் சாதிக் மற்றும் வைபவ் முருகேசன் முன்னாள் காதலி கிரிக்கெட் தீவிர ரசிகை லாவண்யா உடன் வருகிறார்கள் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் நுழைவாயில் பிறகே தெரியவருகிறது தாங்கள் வாங்கி டிக்கெட் போலியானது தெரியவருகிறது  பெரும் ஏமாற்றம் இருந்தாலும் அடுத்த போட்டியை பார்க்க ஆவலுடன்  பணம் சம்பாதிக்க சமோசா கடையில் வேலை பார்க்கிறார்கள் இன்னொருபுறம் இவர்களின் பணம் திருட்டு ஊர்காரர்கள்  தெரியவருகிறது ஊரில் பிரச்சினை புயலாக வீசுகிறது மம்மட்டியான் ஸ்டார்ஸ்”,கிரிக்கெட் அணி நண்பர்கள் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்களா  ? ஊர் பணத்தை திரும்ப கொடுத்தார்களா?  பல திருபங்களுடன் வெப்தொடர் தொடர்கிறது

நடிகர்கள்

இயல்பான கதாபாத்திரங்கள். வைப்பவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட இளம் நடிகர்கள்  கிராமத்து பசங்க கிரிக்கெட் விளையாட்டு போட்டி எல்லாம் எதார்த்தமான இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் , விவேக் பிரசன்னா ஆகியோர் வரும் காட்சிகள் கதைக்கு சுவாரஸ்யத்தை சேர்க்கின்றன.

தொழில் நுட்ப கலைஞர்கள்  தொடர் நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவு, பின்னணி இசை & எடிட்டிங் ஆகியவை கதையின் ஓட்டத்திற்கு  சரியாக அமைந்திருந்தது

மொத்தத்தில், மம்மட்டியான் ஸ்டார்ஸ்  நட்பு, கிரிக்கெட் மீதான பைத்தியம் மற்றும் இளமைக்கால கனவுகளை எளிமையாகச் சொல்லும்  ஒரு ‘ஃபீல்-குட்’ (Feel-good) கதையைத் தந்துள்ளார். இந்தத் தொடர், கிரிக்கெட் மீதான காதலை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது., திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதால் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறது

கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டும் காட்டாமல், ரசிகர்களின் உணர்வுகளுடன் இணைத்து சொல்ல முயற்சிப்பது பாராட்டத்தக்கது.