Thursday, April 16

“க்ராணி” திரை விமர்சனம்.

நடிகர்கள் :-வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி, கஜ ராஜா, அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கன்ஷ்யாம், குழந்தை சாண்ட்ரியா

படக்குழுவினர்:-​
தயாரிப்பு நிறுவனம்: விஜய் மேரி யுனிவர்சல் மீடியா
தயாரிப்பாளர்: டி.விஜயமேரி
விநியோக நிறுவனம்: ஹரி உத்தாரா புரொடக்ஷன்ஸ்
இசை ஆடியோ நிறுவனம்: கலைப்புலி இன்டர்நேஷனல் ஆடியோ
எழுதி இயக்கியவர்: விஜய குமரன்
ஒளிப்பதிவு இயக்குனர்: ஏ.மணிகண்டன்
இசையமைப்பாளர்: டாக்டர் செல்லையா பாண்டியன்
எடிட்டர் :: எம்.எஸ். கோபி
பாடல்கள் மற்றும் வசனங்கள்: கே.யு.கார்த்திக் சண்டை பயிற்சி
ஆக்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு: சதீஷ் (எஐஎம்) ஜனவரி 30, 2026-ல் வெளியானது

படத்தை பார்ப்போம்:

10 வயது சிறுமி மர்மான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அந்த சிறுமியின் இதயம் மட்டும் திருடபடுகிறது …..

வெளிநாட்டில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டில் ஆனந்த் நாக் குடியேறுகிறார். அந்த சமயம் வீட்டு வாசலில் மூதாட்டி வடிவுக்கரசி மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை உள்ளே அழைத்து வந்து, படுக்க வைக்கிறார் சில நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷ்யங்கள் நடக்கிறது   இறுதியில் வீட்டில் அமானுஷ்ய விஷயம் நடக்க காரணம் என்ன? வடிவுக்கரசி யார்? குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? என்பதே படத்தின் மீதிக்கதை…

வடிவுக்கரசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு திகில்-திரில்லர் இந்த வயதிலும் கதையின் நாயகியாக வடிவக்கரசி.மிகவும் மிரட்டலான மற்றும் வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்மார்ட் ஆக வரும் ஆனந்த் நாக்.. அவரின் முடிவு பரிதாபம்.. அவரை ஒரு ஆக்ஷன் பைட் போட வைத்திருக்கலாம்..

போலீசாக திலீபன் மற்றும் சிங்கம் புலி.. இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம்.. இதில் திலீபன் கம்பீரம் என்றால் சிங்கம் புலி காமெடி போலீஸ்..

கஜராஜா கேரக்டர் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என நம்பி எதிர்பார்த்து இருந்தால் கேரக்டர் பெரிய வலுவில்லை..

விஜயகுமாரன் கதை மற்றும் இயக்கம்: ஒரு கொலை வழக்கை மையமாக வைத்து, அதில் அமானுஷ்யம் மற்றும் திகில் கலந்து கதை சொல்லப்பட்டுள்ளது. பழைய சம்பவங்களுடன் தற்போதைய விசாரணையை இணைக்கும் திரைக்கதை முயற்சி.
.
தொழில்நுட்பம்: திகில் காட்சிகளுக்கு இசையும், மணிகண்டனின் ஒளிப்பதிவும் கைகொடுத்துள்ளன.எடிட்டர் :: எம்.எஸ். கோபி படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளனர். படத்தில்
சில திகில் திருப்பங்கள்.
: திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்   , இருந்தாலும் உங்கள் முயற்சி பாராட்டு இப்படம் அனைவரும் ரசிக்கும்படி – கொடுத்துள்ளார்