
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஏ. ஆர். ஜீவா
நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, ப்ரியா கோதை வெங்கட், லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்
இசை: என்.ஆர்.ரகுநந்தன் .எடிட்டர் வி.கே சாபு ஜோசப் , மக்கள் தொடர்பு சதீஷ் குமார் எஸ்.2 மீடியா
வெளியான தேதி: ஜனவரி 29,2026
கதை கரு:
கொரோன காலத்தில் லாக்டவுனில் சிக்கி சிதைந்த இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டம் சொல்லும் கதை :
படத்தை பார்ப்போம்:
மிடில் கிளாஸ் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் படித்து முடித்து விட்டு அப்பா,அம்மா, தங்கை உடன் வாழ்ந்து வருகிறாள் குடும்ப சூழ்நிலைக்கா வேலை தேடுகிறார் அனுபமா, தனது தோழியுடன் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர். தோழியின் வற்புறுத்ததால் அனுபமா குடித்துவிட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழ, அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக் முகம் தெரியாத நபர் ஒருவர், அவளை கற்பழிக்கப்படுகிறார் மறுநாள் காலை வீட்டுக்கு சென்று வழக்கம்போல் தனது வாழ்க்கை தொடரும் அனுபமா சில வாரங்கள் கழித்து தான் தெரிகிறது கர்ப்பாக இருக்கிறது இந்த விழியத்தை மறைக்க குடும்பத்துக்கு தெரியாமல் கருகலைப்பு முயற்சி செய்கிறாள் திடீர் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் ஆரம்பம் லாக்டவுன் தொடங்குகிறது இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், மாத்திரை தேடி அலைகிறார் கர்ப்பத்தை கலைத்தாரா..? இல்லையா? அனுபமா கர்ப்பத்துக்கு யார் காரணம் ..? அவனை கண்டுபிடித்தரா ..? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..
ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் ஹீரோவே கிடையாது. அனுபமா கேரக்டர், அவர் நடிப்பு, குறிப்பாக, வேலை தேடி அலைவது, கர்ப்பத்தை கலைக்க முடியாமல் ,குடும்பத்தினரை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றால் மண போராட்டம் சிக்கி தவிப்பது கலங்குவது அனைவரின் கவனத்தை ஈர்த்தது முன்னனி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த இவர் இந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தது பாராட்டு அனுபமா பரமேஸ்வானுக்கு அவருக்கு அப்பாவாக .சார்லி, அம்மா நிரோஷா மற்றும் அனுபமா தோழியாக வரும் ப்ரியாகோதை வெங்கட் நல்ல நடிப்பால் அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளார் மற்றும் லிவிங்ஸ்டன், லொள்ளு சபா மாறன் /இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்,
இசை: என்.ஆர்.ரகுநந்தன் : எடிட்டர் :வி.கே சாபு ஜோசப் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார் இவர்களின் பங்களிப்பு படத்திற்க்கு பெரிய பலம்,
லாக்டவுன் கொரோன காலத்தில் ஒரு பெண் சந்தித்த மனிதர்களையும், . அவர்களால் . எதிர்கொண்ட பிரச்சனை ,வலிகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா. பெண்கள் உஷாராக எச்சரிக்கையாகவும் இருக்க சொல்வதே *லாக்டவுன்” பெண்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் பார்க்க வேண்டியபடம்..பாரட்டு










