Sunday, April 19

“காத்துவாக்குல ஒரு காதல்” திரைவிமர்சனம்

சென்னை புரொடக்ஷன் சார்பில் எழில் இனியன் த​யாரித்திருக்கும் காத்துவாக்குல ஒரு காதல்; படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் மாஸ் ரவி.

இதில் மாஸ் ரவி என்கிற ஜீவா – மாஸ், லட்சுமி பிரியா என்கிற மேகா, மஞ்சு என்கிற பல்லவி, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி, ஆறு பாலா, பிரியதர்ஷினி ராஜ்குமார், சந்தீப் குமார், கபாலி விஸ்வந்த், மஞ்சுளா, மீனாக்சா, பத்மன், சத்யா, பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் :- இசை – ஜிகேவி – மிக்கின் அருள்தேவ், ஒளிப்பதிவு – ராஜதுரை – சுபாஷ் மணியன் , எடிட்டர் – கம்பம் மூர்த்தி – ராஜ்குமார், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் : ஹேப்பிசன் ஜெயராஜ்,இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன் ,மக்கள் தொடர்பு : கே மீடியா ரிலேஷன்ஸ், இரா. குமரேசன்

படத்தை பார்ப்போம்

நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். உருகி உருகி காதலிக்கிறார்கள். மறுபக்கம் இரு  ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே  மோதலில் பல ரவுடிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரை தேடி அலையும் நாயகி லட்சுமி சூழ்நிலையில் தன் கண்முன்னே காதலன் ரவுடிகளை விரட்டிக்கொண்டு போவதை பார்த்து ஷாக் ஆகிறாள்…மாஸ் ரவியை மீண்டும் சந்திக்கிறார். ஆனால், மாஸ் ரவி லட்சுமி பிரியாவை தெரியாதவர் போல், கண்டு கொள்ளவில்லை  இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்ன ?.லட்சுமி  பிரியாவின் காதல் என்ன ஆனது ?, கதாநாயகன் ஏன் அந்த ரவுடிகளை துரத்தி சென்றான்? பல புரியாத .புதிர்களுக்கு  படத்தின் மீதிக்கதை….

நடிகர்கள்

படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, அமையான ஒரு கதாபாத்திரம் மற்றெருவர் அதிரடி சண்டை காரனாகவும் இரு கதாபாத்திரம் மாஸ் ரவி கதாநாயகனாக வித்தியாசமான நடிப்பிலும்  சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சிரித்த முகத்தோடு அழகாக இருக்கிறார்.  . மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு நடிப்பிலும் குறையில்லை.

வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா நடிப்பு  சிறப்பாக இருந்தது

ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகள்,   சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்

இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.  வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் கேமரா காட்சிகளை பளிச்சென்று காட்சிப்படுத்தியிருப்பதோடு, சூப்பர்

படத்தின் முதல் பாதியில் காதலும், ரவுடிகளின் மோதலும் நிறைந்திருந்தாலும், . அதே சமயம், இரண்டாம் பாதியில் பல ,எழுதி இயக்கியிருக்கும் மாஸ் ரவி, காதல் கதையை பல மர்ம முடிச்சுகளுடன் சொல்லியிருக்கிறார். கிளை மெக்ஸ் காட்சி எதிர்பார்க்காத  திருப்பங்கள்.

மொத்தத்தில், ‘காத்துவாக்குல ஒரு காதல்’ இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். உங்கள் முயற்ச்சி பாராட்டுக்கள்.