
மாயக்கூத்து திரைவிமர்சனம்
A R ராகவேந்திரா இயக்கத்தில் டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா நாகராஜ் கண்ணன், காயத்ரி, மிருதுளா, ஐஸ்வர்யா ரகுபதி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாயக்கூத்து
எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தொழில் கொலை செய்வது தனது 50 ஆவது கடைசி கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலை விட்டு விட நினைக்கிறார்.
இரண்டாவது தொடரின் கதாபாத்திரம் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து,பள்ளி மாணவியான ராஜி(மிருதுளா) மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசை கனவு ராஜி வீட்டில் எதிர்ப்பு, காரணம் நீட் தேர்வு எழுதி பாஸ் ஆகவில்லை என்றால் மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தால் நீட் தேர்வு எழுத கூடாது அப்பா அம்மா கூறிவிட்டார்கள் இவளுடைய கனவுகள் கலைக்கப்படுகிறது இதனால் மாணவி தான் நினைத்த படிப்பைப் படிக்க முடியாமல் வேதனையுடன் மனசு பிடிகாத வேலை தனியார் கிளினிக்கில் நர்ஸ் உதவியாளராக வேலை செய்து கொண்டு, மன உளைச்சலில் தவிக்கிறாள். அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்ள வீட்டில் விவசாயத்திற்க்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதை கவனிக்கிறார் முடிவு என்ன ?செய்கிறாளா? அல்லது நினைத்த படிப்பை எழுத முடிவு செய்தாளா? என்ற கேள்விக்குறியுடன் முடிகிறது ,மூன்றாவது தொடரின் கதாபாத்திரம் செல்வி (ஐஸ்வர்யா ரகுபதி) ஏழ்மையான குடும்பம் என்றாலும் நேர்மையான பெண் குடும்பத்தை நடத்த போராடுகிறாள். இவளுக்கு குடிகார கணவன் இவள் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள் தன் மகனின் பள்ளி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவிக்கிறாள் தெரிந்தவர்களிடம் கடனாக ரூபாய் 2000/வாங்குகிறாள் அந்த பணத்துடன் வீட்டு வேலைக்கு போகிறாள் அந்த வீட்டில் ரூபாய் 2000/ காணாமல் போகிறது இவள் தான் அந்த பணத்தை எடுத்து வைத்துள்ளார் ராதிகா வீட்டு முதலாளியம்மா கூறுகிறார் திருட்டு பழி விழுகிறது வேலைகாரிக்கும் வீட்டு முதலாளியம்மாவும் வாக்குவாதம் நடக்கிறது ஒரு கட்டத்தில் வேலைகாரி செல்வி கொலை செய்யபடுகிறாள் வேலைக்காரியின் குடிகார கணவன் மனைவி தேடிகிட்டு அவள் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார் அந்த வீட்டு முதலாளி அம்மாவிடம் என் மனைவி. கூப்பிடுங்க. இங்கே வரவில்லை உன் மனைவி அப்பவே போய்விட்டாள் கூறுகிறார்கள் அவன் நம்ப மறுக்கிறான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைகிறான் தன் மனைவி கொலை செய்யப்பட்டது கண்டு அதிர்ச்சியாகிறான் மனைவி கொன்றவர்களை இவன் கொலை செய்தானா ? போலீஸ்க்கு போனாரா இல்லையா ? இங்கு நடந்தது என்ன? கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, செல்வி, எழுத்தாளரின் வீட்டிற்கு வந்து, “நேர்மையான என் மீது ஏன் இந்தப் பழியைப் போட்டீங்க?” எனக் கேட்கிறார். பின்னாலேயே வரும் ராதிகா, “ஏன் புருஷன் மாதிரி செல்விக்கு சப்போர்ட் பண்ற வேலை வச்சுக்காதீங்க” கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். இவர்களிடயிருந்து தப்பி ஓடும் வாசன், கொலைகாரன் தனபாலிடம் சிக்கிக் கொள்கிறார் பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார்.படத்தின் மீதிகதை
கதாபபாத்திரங்கள் படைப்பதினால் நான் இறைவன் என்று ஆனவும், திமிர் கர்வம் கொண்ட வாசன் மாட்டிக் கொண்டு திண்டாடுவதும், அவர்களிடம் விவாதம் செய்து தப்பிக்க முயன்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயந்து ஒடும் காட்சிகள், பொறுப்பை உணர்ந்து திருந்துவது . இப்படி எதார்தமான சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் .
டெல்லி கணேஷ் (பத்திரிகை ஆசிரியர் வரதராஜன்), மு ராமசுவாமி சிலையை உருவாக்கும் சிற்பியாகவும்– வாசனின் ஆலோசனை வழங்கும் நல்லவழிகாட்டி டாக்டர் எஸ்.கே. காயத்திரி வாசனின் மனைவி – இந்து , சாய் தீனா (தனபால் ) தொழில் கொலை டார்கெட் 50 செய்வது அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இவர்களுடன் ஐஸ்வர்யா ரகுபதி (செல்வி ) வேலைகார பெண் இவரின் கணவர் (ரமேஷ்) குடிகாரன கார்பென்டர்.கார்த்திக் சீனிவாசன் / வீட்டு முதலாளியம்மா , ராதிகா ,ராதிகாவின் கணவர் – அசோக் மிருதுளா (மாணவி – ராஜி), மற்றும் இவர்களுடன் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் மற்றும் பின்னணி இசை படத்திற்க்கு பக்கபலமாக இருந்துள்ளது
எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு படத்திற்க்கு மிக பெரிய பங்களிப்பை வழங்குகியிருக்கிறார் அனைவரும் ரசிக்கும்படியும், புரிந்து கொள்ளும் விதமாக தெளிவாக கொடுத்துள்ளார்
இயக்குனர் ஏ.ஆர். ராகவேந்திரா, எழுத்தாளர் எம்.ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தொடர்கதை பயணத்தை சுவாரஸ்யத்துடன் கொடுத்து வித்தியாசமான திரைக்கதைக்கு இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா. வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் மாயக்கூத்து வித்தியசமான கதை விரும்பிகளுக்கு விருந்து பார்த்து மகிழலாம்.










