
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் கட்டா குஸ்தி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு.
இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், பேபி சாரா, யோகி பாபு, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மொக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: கே. எம;. பாஸ்கரன், படத்தொகுப்பு: பரத் விக்ரமன், மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்)
படத்தை பார்ப்போம்:
2022ல் குடும்பங்களின் மனைதக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியாக அதே உற்சாகத்துடன் வந்திருக்கிறது கட்டா குஸ்தி 2
விஷ்ணு விஷால் _ஐஸ்வர்யா லட்சுமி இந்த தம்பதிக்கு ५_வயதில் குழந்தை இருக்கிறது ஐஷ்வர்யா லட்சுமி ரயில்வே துறையில் வேலை செய்கிறார் தொடர்ந்து கட்டாககுஸ்தி விளையாட்டு பயிற்சி ஈடுபட்டு வருகிறார் அவருக்கு உதவியாக வேலையில்லாத ஹாவுஸ் ஹஸ்பண்டாக வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொண்டு மனைவியின் கனவை நனவாக்கும் பொறுப்பான கணவர் அவர், ஐஸ்வர்யா லட்சுமியை தேசிய அளவிலான போட்டிக்கு தயார்படுத்துகிறார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் செய்த தவறினால் ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்த போட்டியில் தோல்வியடைகிறார் போதை பொருள் உட்கொண்டதால் நிர்வாகம் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கபடுகிறது இதற்கு காரணம் தன் கணவர் தான் தெரியவருகிறது இதற்கிடையே, அவர்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இந்த சிறிய கருத்து வேறுபாடு குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி, விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
இறுதியில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்தார்களா? தேசிய அளவிலான போட்டிக்கு கலந்து கொண்டாரா? என்பதே பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதை
நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மிக இயல்பான நடிப்பில் குடும்ப தலைவனாக மனைவி ,மகள் மீது கொண்ட பாசம், சண்டை ,காமெடி, தவிப்பு ,உருக்கம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இந்த முறையில் இன்னும் பலமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.
கிளைமேக்ஸ் கணவன்_ மனைவி மோதல் மல்யுத்த போட்டியில் கணவரை புரட்டி எடுக்கும்போதும் மல்யுத்த விளையாட்டு முரட்டுத்தனமாக மோதும் வீராங்கனையாகவும், குடும்ப வாழ்க்கையில் பாசகார மனைவியாகவும் ,குழந்தைக்கு நல்ல அம்மாகவும் இரு பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்
தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, தனது சுட்டித்தனமான நடிப்பால் பார்வை யாரின் அனைவரின் கவனத்தையும் ஈர்கிறார் . கருணாஸ் வழக்கம்போல் தனது டைமிங் காமெடியால் சிரிக்க வைக்கிறார். மோக்ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்து கொடுத்துள்ளார் மற்றும் நீதி பதியாக வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது .
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கர் ஒளிப்பதிவு அழகாகவும் சிறப்பாக இருக்கிறது.
எடிட்டர் : பரத் விக்ரமன்,படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்துள்ளார்.
இயக்கம்
ஒரு இயல்பான குடும்ப பின்னணியில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் நகைச்சுவையுடன் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மொத்தத்தில் இப்படம் அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் செல்லா அய்யாவு .பாராட்டு
ரேட்டிங் ४:2/
