Thursday, June 11

“இங்க நான் தான் கிங்கு “திரைப்பட விமர்சனம்

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த “இங்க நான் தான் கிங்கு “ படத்தை இயக்கியிருக்கிறார் ஆனந்த் நாராயண் இதில் சந்தானம் – வெற்றிவேல், ப்ரியாலயா – தேன்மொழி, தம்பி ராமையா – விஜயகுமார் (ஜமீன்), பாலா சரவணன் – பாலா (சின்னா ஜமீன்), விவேக் பிரசன்னா – அமல்ராஜ், முனிஷ்காந்த் – பாடி பல்ராம், சுவாமிநாதன் – சுவாமி, மாறன் – ரோலக்ஸ்,சேசு – வினோத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

-ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,இசையமைப்பாளர் – டி.இமான், எடிட்டர் – எம்.தியாகராஜன், எழுத்தாளர் – எழிச்சூர் அரவிந்தன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல், பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன், முத்தமிழ், தயாரிப்பு நிர்வாகி – எம்.செந்தில் குமார், தயாரிப்பு மேற்பார்வை – எம்.பச்சியப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ஆர்.கே. நவதேவி ராஜ்குமார், உடை – ஆர்.முருகானந்தம், சவுண்ட் மிக்ஸ் – டி.உதயகுமார், நாக் ஸ்டுடியோ, ஷேட் 69 ஸ்டுடியோஸ், மேக்கப் மேன் – அ.கோதண்டபாணி, ஸ்டில்ஸ் – எஸ்.முருகதாஸ், வண்ணக்கலைஞர் – பிரசாத் சோமசேகர்,வடிவமைப்புகள் – என்.டி. பிராதூல், கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் – ஜெயவேல்முருகன்,தலைமை தயாரிப்பு நிர்வாகி – அனில் குமார்.எம்.கே, பிஆர்ஒ – நிகில் முருகன்.

கல்யாணா ஆகிற வயசு பசங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா? கல்யாணம் பண்ண பொண்ணு கிடைகலைன்ற  ஒரு பக்கம் இருந்தாலும்  பொண்ணுங்க போடுகின்ற கண்டிஷனை பாருங்க : மாப்பிள்ளை நடிகர் : விஜய், / அஜித் மாதிரி , அப்புறம்  சொந்த வீடு / மாத சம்பளம் கைநிறைய இருக்கனும்  இந்த மாதிரி கல்யாண கண்டிஷன் போடுறதால கல்யாணம் ஆகாமல் இருக்காரு சந்தானம். இதுல 25 லட்சம் கடன் வேற. யாரு கல்யாணம் பண்ணிக்கு வா? ஒரு வழியா ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பிரியாலயா (நம்ம ஹீரோயின் தாங்க ) கல்யாணம் பண்ணிக்க ஒ கே சொல்றாங்க.பொண்ணோட அப்பா, தம்பி ராமையாவும், தம்பி பால சரவணனும் பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. கல்யாணம் ஆனப்புறம் தான் தெரியுது, இது  கடன்கார ஜமீன்னு.. சந்தானம் கடனை எப்படி அடைத்தார்? ஜமீன் அவர்களின் குடும்பத்தால் என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பதே மீதி கதை..

சந்தானம் தனது வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதில் குறை ஏதுமில்லை.  தனது நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்.  அறிமுக நடிகை பிரியாலயாவுக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை அந்த  அளவுக்கு நடிப்பில் தேர்வாகியுள்ளார்   தம்பிராமையா தம்பி ராமையாவில் பல காமெடிகள் சிறப்பாக ரசிக்க முடிகிறது சில காட்சிகள் ஒவர் ஆக்டிங்க இருக்கிறது ,பால சரவணனின் டைமிங் காமெடி கைக்கொடுக்கிறது. விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். இமான் இசையில் ‘மாயோனே’ பாடல் ரிபீட் மோடில் கேட்கலாம் போன்ற உணர்வை தருகிறது. மற்றொரு பாடல் கேட்கும்படியாக இருந்தது  .பின்னணி இசையில் ஒகே ஒளிப்பதிவு – ஓம் நாராயண், – , எடிட்டர் – எம்.தியாகராஜன், மற்றும் இதில் பணியாற்றி அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்

முதல் பாதியில் படம் சில இடங்களில் படம் காமெடியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திரும்பங்களால் நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களைப் போன்ற காமெடி படம் தான் `இங்க நான் தான் கிங்கு’. சிலருக்கு படு ஜாலியாக இருக்கலாம், சிலருக்கு சுமராக  இருக்கலாம் .

என் விமர்சனம் சுமராகதான் உள்ளது:

குடும்பத்துடன் பார்கலாம்