Sunday, May 31

“நாங்கள்” திரைப்பட விமர்சனம்

நாங்கள் திரைப்படத்தினை, ‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுத்து இயக்கம், ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார். மற்றும் இவர்களுடன்  : வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

நாங்கள்‘ திரைப்படம் பற்றி பேசுவோம்

கதை கரு    அம்மாயின்றி கண்டிப்பாண அப்பாவிடம்  வளரும் மூன்று குழந்தைகள் பற்றி கதை

ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வருபவரான அப்துல் ரபே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். தனது மூன்று ஆண் பிள்ளைகளை  மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். இவர்களுடன்  ஒரு நாய் வளர்கிறது அப்பா வெளியே சென்றவுடன்   அந்த நாயிடம் இந்த குழந்தைகள் விளையாடிய மகிழ்வார்கள் அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடனே அமைதியாக நல்ல பிள்ளை போல் இருப்பார்கள் குழந்தைகள்  சிறிய தவறு செய்தாலும்  கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார். தந்தையின் அடி மிரட்டலுக்கு பயந்து  குழந்தைகள், ஒருகட்டத்தில் அப்பா விட்டு  கேரளாவில் உள்ள அம்மா பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள். அங்கு  அம்மா, தாத்தா உடன் சந்தோஷமாக இருக்கிறார்கள்.   மீண்டும் அப்பாவிடமே திரும்புகிறார்கள். திடீரென்று நாய் கொடூரமாக இறந்து கிடைக்கிறது  மகன்களின்  எதிர்காலத்துக்காக சில முடிவுகள் அப்துல் ரபே எடுக்கும்போது மனைவி பிரார்த்தனா வந்து சேருகிறார். அப்துல் ரபே தனது மனைவியை ஏற்றுக்கொண்டாரா? மனைவியை விட்டு பிரிய என்ன காரணம் ?  குழந்தைகளுக்காக அவர் எடுக்கும் முடிவுகள் என்ன? நாய்யை கொன்றது யார்? என்பதே படத்தின் மீதி கதை.

கண்டிப்பான தந்தையாக  படம் முழுக்க கொடூரமான சைக்கோ தனமான நடிப்பை வழங்கியுள்ளார், அப்துல் ரபே. /மனைவி பிரார்த்தனா இயல்பான நடிப்பால் கவருகிறார். அப்துல் ரபேவின் மகன்களாக மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பு எதார்த்தமாக இருந்தது

.சோகமான காட்சிகளை மட்டும் கருப்பு-வெள்ளையில் காட்டி அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் புதுமை செய்துள்ளார். வேத் சங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார். நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

இப்படம் பார்க்க  பொறுமை  வேண்டும்

*””””