
ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரித்திருக்கும் திரு.மாணிக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி.
நடிகர்கள்: பி.சமுத்திரக்கனி – மாணிக்கம், பாரதிராஜா – மாதவபெருமாள், அனன்யா – சுமதி, தம்பி ராமையா – லண்டன் திரும்பிய வணிகர், இளவரசு – பெரியப்பா, நாசர் – வாப்பா, சின்னி ஜெயந்த் – தேவாலய தந்தை சாமுவேல் , வடிவுக்கரசி – கற்பகம், கிரேசி – செல்லம்மாள் , கருணாகரன்- சர்குணம், சுனில்குமார் – கேசவன், சந்திரு, சாம்ஸ் – பஸ் டிரைவர்கள் – நாராயணன், ஸ்ரீமன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- பாடல் வரிகள்: சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன், சொர்க்கோ, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சுகுமார், எடிட்டிங் – குணா, கலை- சாஹு, எடிட்டிங் மேற்பார்வை- ராஜா சேதுபதி, இயக்குனர் குழு- சுபாஷ்.கே, சதீஷ் பாலா, கார்த்திக் காமராஜ், தேனா சக்திவேல், ஜெய்சங்கர்.பி, மேக் அப் – ஜி.சுரேஷ் குமார், காஸ்ட்யூமர் – ஆர்.முருகன், ஸ்டண்ட்ஸ் – தினேஷ் காசி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – சேது.சி, மிக்சிங் – டி.உதய் குமார் , டப்பிங் – பரணி ஸ்டுடியோஸ் ராஜா மற்றும் கோவிந்த், ஸ்டில்ஸ் – கே.ராஜ், தயாரிப்பு நிர்வாகி – அழகர் குமாரவேல், வெளியீடு – மாஸ்டர் பீஸ், பத்திரிக்கை தொடர்பு – ஏய்ம் சதீஷ்.
சமுத்திரகனி கேரள மாநிலத்தில், குமுளியில் பஸ் STAND ஸ்டேன்ட் இடத்தில் சின்னதாக லாட்டரி டிக்கெட் கடை நடத்துபவர் ,
மனைவி,அனன்யா வீட்டில் இருந்தபடியே ஸ்டேட் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வெரைட்டி ரைஸ் சாப்பாடு தயார் செய்து கொடுக்கிறார், அதில் வரும் வருமானம் தன்னுடைய இரண்டு பெண் பிள்ளை ஒரு பிள்ளைக்கு சரிவர பேச்சுவராது மருத்துவ மனைக்கு சென்று பார்த்தும் பல லட்சம் செலவாகும் மருத்துவர் கூறுகிறார் கையில் பணம் இல்லை இருந்தாலும் எளிமையாகவும் நேர்மையாக வாழ்கிறார்கள் .
லாட்டரி டிக்கெட்டு கடையில் வாடிக்கையாளர்களின் மனசுக்கு பிடித்தவராக உள்ளார் ,
பாரதிராஜா போதிய வருமான இல்லாமல் திருமணமான தன் மகளுக்கு கொடுக்க வேண்டிய தங்க நகை சீர்வரிசை கொடுக்க முடியாத காரணத்தால் நிறைமாத கர்ப்பிணியான தன் மகள் வீட்டில் வாழ வெட்டியா இருக்கிறாள் இதை நினைத்து மனமுடைந்து இந்த சூழ்நிலையில் பாரதிராஜா. பஸ் நிறுத்தில் இருக்கும் சமுத்திரகனி கடையில் நான்கு லாட்டரி டிக்கெட் வாங்குபவர் அப்போது, அவரிடமிருந்த பணம் ரூ 500/= இல்லை வேட்டியில் மடித்து வைத்த பணம் எங்கேயோ கீழே விழுந்து . விட்டதால், டிக்கெட்டு வாங்க அவரிடம் பணம் இல்லை , கடைகாரரிடம் . பணம் கொடுத்துவிட்டு லாட்டரியை திரும்ப பெற்றுக்கொள்கிறேன், .என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
அவர் வாங்கிய டிக்கெட்டுகளில் ஒன்றில் ரூ.1.50 கோடி.பரிசு பணம் அடித்து விட்டது. அதை அவரிடம் . கொடுத்து விட சமுத்திரக்கனி முடிவு செய்து விடுகிறார்.
பாரதிராஜா என்பவர் யார்?, அவர் எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் அவரிடம் எப்படி ? பரிசு விழுந்த லாட்டரியை சேர்ப்பது குழப்பத்தில் இருக்க. அவர் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பேரை வைத்துக்கொண்டு, பஸ் ஏறுகிறார். , மனைவிக்கு இந்த விழியத்தை சொல்ல அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார், அவரது முடிவுக்கு
எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
அவர்களது முயற்சியால் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் சூழ்ந்துதுரத்துகிறது
அதை உரியவரிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?, இல்லையா? அதனால் அவருக்கு நேர்ந்தது என்ன? ஆகிய பல கேள்விகளுக்கு படத்தின் மீதிகதை
பதிலை மனித நேயதோடு சொல்வது தான். திரு.மாணிக்கம்’.திரைப்படத்தின் கதைக்களம்
எளிமை, அனைவரிடத்திலும்மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவர் அதிகம் பேசவில்லை என்றாலும், மாணிக்கம்.கதாபாத்திரத்தின் நேர்மையும், அதன் .பின்னணியும். உள்ள பல விஷயங்களை பேசாமல் பேசிச் செல்கிறார்.சமுத்திக்கனி
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துள்ளார். , இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி,இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாய் என்று முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்,அனன்யா சிறப்பாக நடிப்பை அசத்தியுள்ளார்,
பாரதிராஜா வழக்கம் போல் எதார்த்தமாக பணம் காணமல் போன நடிப்பு காட்சி முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும்
இளவரசு, சில காட்சியில் வந்தாலும் சென்றாலும் நினைவில் நிற்கிறது
கதையை தங்கி பிடிக்கும் பிளாஷ் பேக் வரும். நாசர், நடிப்பு சூப்பர்
பாரதிராஜவுக்கு மனைவியாக வரும் வடிவுக்கரசி, நடிப்பு அற்புதம் .
தேவாலய
பாதிரியராக நடித்து சின்னி ஜெயந்த், சிறப்பாக நடித்துள்ளார்
கருணாகரன், பேருந்து ஓட்டுநர்களாக நடித்திருக்கும் சாம்ஸ், ஸ்ரீமன் என பலர் படத்தில் நடித்துள்ளனர் அனைவரும் வரும் காட்சி நினைவில் நிற்க்கும் ,
தம்பி ராமையா லண்டன் ரிட்டர்னாக நடித்திருக்கும் , காமெடி என்ற பெயரிலும், அதிக நடிப்பு என்ற பெயரிலும் சிரிக்க முடியாத பார்வையாளர்க்கு டென்ஷன் ஏற்படுத்துகிறது .
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும்
கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. பின்னணி இசையும் அளவு. சரியாக இருந்தது
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கண்கள் கேரள பகுதிகளை அழகாக காட்சியை ஒளிப்பதிவை செய்துள்ளனர்
எடிட்டிங் – குணா படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் கொடுத்துளார்
திருடனா வாழ்க்கையை தொடங்கி ஒரு மனிதனால் திருந்தி நேர்மையான வாழ்கை வாழும் ஒரு மனிதனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் திரு .மாணிக்கம் – இயங்குனர் : நந்தா பெரியசாமி : பாராட்டு.
நேர்மையான வாழ்க்கையை, விறுவிறுப்பான திரில்லர் ,குடும்பமாக பார்க்க கூடிய நல்ல படமாகவும் கொடுத்துள்ளார்










