
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பரமசிவன் பாத்திமா படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்
இதில் விமல், சாயாதேவி,எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகமார், கூல்சுரேஷ், அருள்தாஸ்,ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா,விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், கலை இயக்குனர்: வீராசமர், எடிட்டர்: புவன், தயாரிப்பு நிர்வாகி: டி.முருகேசன், நடன இயக்குனர்: லீலாவதி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பாளர்: ஹரிஷ்.கே.அன்பு, ஒப்பனை: ஜி.சுரேஷ்குமார், உடை: ரஞ்சித், ஸ்டில்கள்: கே.ராஜ், பிஆர்ஒ: நிகில் முருகன்
திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற கிராமத்திற்கும் இந்துக்கள் வாழ்கின்ற கிராமத்திற்க்கும் இந்த இரண்டு கிராமத்திற்க்கும் அடிக்கடி மோதல் பிரச்சனைகள் ஏற்படும் ஊரில் கல்யாணங்கள் நடந்தால் அன்று ஒரு கொலை விழும் தொடர்ந்து இரண்டு மூன்று கொலைகள் நடக்கிறது . ஏற்கனவே விமல் /சாயாதேவி இறந்து ஆவியாக சுற்றியளைகிறார்கள் இந்த கொலை வழக்கு விசாரிக்க தனிப்படை போலீஸ் இசக்கி கார்வண்ணன் வருகிறார்
அந்த ஊர் எல்லைக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்து இரண்டு ஊர் மக்களையும் காவல் காக்குகிறார் .இருந்தும் கொலைக்காரனை கண்டுபிடிக்க முடியவில்லை .விமல் / சாயதேவி கொன்றது யார்…? என்ன காரணம் எதற்காக கொலை பண்றான் என்பது தான் படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
விமல் ஆவியாக வந்த ஆரம்பம் காட்சியும் பிளாஷ்பேக்கில் வரும் பள்ளி ஆசிரியராகவும் ஊர் மக்களின் நலனுக்காக முதல் ஆளாக வந்து நிற்பது . .மத போதகர்கள் ஊருக்குள் வந்து பிட் நோட்டீஸ் பிரச்சாரம் செய்தவர்களை நீங்கள். இன்னும் திருந்தவில்லையா ? கிண்டல் செய்து திருப்பி அனுப்பி காட்சி சிறப்பு !
சாயாதேவி ஆவியாகவும் .பிளாஷ் பேக் பள்ளி ஆசிரியராகவும் . விமலை துரத்தி காதலிப்பதும் பள்ளி வளாகத்தில் இழுத்து முத்தம் கொடுப்பதும் ஒவ்வொரு காட்சியிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், பாதிரியார். கதாபாத்திரம் சரியான பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இரண்டு குதிரை சவாரி. (1 நடிப்பு ,2 இயக்கம் )சிறப்பாக கொடுத்துள்ளார் அந்த ஊர் மண் சார்ந்தவராக வாழ்ந்திருக்கிறார்
வில்லனாக அறிமுகம் ஆகி இருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் மதவெறி யாரக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கூல் சுரேஷ் ஒரு பாடல் ஆட்டம் பாட்டம் மென்று அசத்தியிருக்கிறார் அவர் வரும் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் .
மனோஜ் குமார். இந்துவாக இருந்து கிறித்துவராக மாறி மீண்டும் இந்து முறைப்படி மனோஜ் குமார். உடலை புதைக்கு காட்சிகள் படத்தின் திருப்பு முனை இருந்தது , ஆதிரா, மனோஜ் குமார்க்கு மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார், காதல் சுகுமார் போலீஸ்கராக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றும் இவர்களுடன் நடித்த ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ::இசை : பின்னனி சிறப்பாக தீபன் சக்ரவர்த்தி கொடுத்திருக்கிறார் ,
ஒளிப்பதிவு : எம்.சுகுமார் : இயற்கையும் அந்த ஊர் அழகான ஒளிபதிவு காட்சிகள் , : எடிட்டர்: புவன் படத்திற்க்கு தேவையான காட்சிகள் கொடுத்தாலும் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
இயக்குனர் இசக்கி கார்வண்ணன் நீங்கள் தேர்ந்தெடுக்க கதைக்களம் இந்த மண்ணில் நடந்த அவலங்களை கொடுமைகளை .நம் முன்னோர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சரியாக துணிச்சலாக கொடுத்துள்ளீர்கள் நம் மண்ணின் வரலாறு கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக இருந்தது பாராட்டு வாழ்த்துக்கள்.
அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கும் வேண்டிய. படம்










