Monday, July 27

“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.

அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கம்பி கட்ன கதை’

உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை கைபற்ற போடும் திட்டம்  இது எங்கெங்கெல்லாம் சென்று வந்தது இப்போது எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று ஒரு கதை  சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.

கோஹினூர் வைரத்தை  கைபற்ற நினைக்கும் ஒரு அரசியல்வாதி சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடிக்காரனை தேடிக் கடைசியில் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

வைரத்தைக் கண்டுபிடிக்க ஒத்துக் கொள்ளும் நட்டி, வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார்.அந்த வைரம் கைக்கு வந்ததும் அதைத் தானே ஆட்டையைப் போட நினைக்கிறார். ஆனால் அவரை சும்மா விட்டு விடுவார்களா..? நட்டியை அவர்கள் துரத்த இவர் ஓட  வைரம் என்ன ஆனது  . அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

சதுரங்க வேட்டைக்கு பிறகு இப்படி ஒரு வில்லங்க வேடம் நட்டிக்கு. “பத்து பைசா செலவில்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன்… உங்களுடைய நான்காவது மாத சம்பளத்தை எனக்கு கமிஷனாக கொடுத்தால் போதும்…” என்று பொதுமக்களை ஏமாற்றுவதில் ஆரம்பித்து சாமியார் வேடம் போட்டுக்கொண்டு  நித்தியானந்தாவை நினைவுபடுத்தும். விதமாக அசத்துகிறார்  நட்டி

சாமியார் வேடத்தில் ரஞ்சிதாவை நினைவுபடுத்தும் அளவில் வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி.

இன்னொரு நாயகி  ஷாலினி  தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது தவிர வேறு எதையும் செய்யவில்லை.

சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம் ,ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்)ஆகியோர் அடங்கிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டணியின் காமெடி ரசிக்கலாம்

ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் ஆகியோரது பணி சிறப்பாக இருந்தது

எழுதி இயக்கியிருக்கும் ராஜநாதன் பெரியசாமி, போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை மையமாக வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் முதல் படத்தில் முத்திரை பதித்துள்ளார் பாராட்டுகள்

மொத்தத்தில், ‘கம்பி கட்ன கதை’ பார்க்க ரசிக்கலாம்