“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.
அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கம்பி கட்ன கதை'
உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை கைபற்ற போடும் திட்டம் இது எங்கெங்கெல்லாம் சென்று வந்தது இப்போது எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று ஒரு கதை சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.
கோஹினூர் வைரத்தை கைபற்ற நினைக்கும் ஒரு அரசியல்வாதி சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடிக்காரனை தேடிக் கடைசியில் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்.
வைரத்தைக் கண்டுபிடிக்க ஒத்துக் கொள்ளும் நட்டி, வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவ...
