Thursday, April 16

“எக்ஸ்ட்ரீம்”திரைப்பட விமர்சனம்.

சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா.

இதில் ரக்சிதா மஹாலஷ்மி – ஸ்ருதி (காவல் அதிகாரி), அபி நக்ஷத்ரா – திவ்யா, ராஜ் குமார் நாகராஜ் – சத்திய சீலன், அனந்த் நாக் – ஜெய்,அமிர்தா ஹல்டர் – ஸ்ரேயா, சிவம் தேவ் – திரு ,ராஜேஸ்வரி ராஜி – சுகா, சரிதா – அலமேலு, பரோட்டா முருகேசன் – முருகேஷ், ராஜசேகர் – சேகர்,ஜெயராஜ் ஜெய- ஜெயராஜ், குட்டி கமலாத்மிகா – ஸ்ரீ,மாஸ்டர் கோகுல், தன சேகர் – தனா, ஓட்டேரி சிவா – சிவா,சந்திர மௌலி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-; ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர்,ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, அசோசியேட் ஒளிப்பதிவாளர் – கிஷோர், ராமச்சந்திரன்,ஸ்டில்ஸ் ​- சுரேந்தர், பிஆர்ஒ – புவன்…..

கதைகளம்

இளம் பெண் கொலை !யார் செய்தது காரணம் என்ன ? …

படத்தை பார்ப்போம் …. புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் நடைபெற்றுயிருக்கும் அந்த இடத்தில் ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப் படுகிறது போலீஸ் விசாரனையில் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் வேலைகாரியின்  மகள்  அபி நட்சத்திரா இவளை பல பேர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருப்பதை போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது . கொலை செய்தது யார்? கட்டுமான பணி நடக்கும் இடத்தை தேர்வு செய்ய காரணம் என்ன? போலீஸ் அவர்களை கண்டுபிடிக்கார்களா ? இல்லையா  என்பதே படத்தின் மீதிக் கதை

நடிகர்கள் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ் தன் மகளை இழந்த மனைவியை பிரிந்து வாழ்கிறார் . புதியவர் இருந்தாலும் இவர் நடிப்பு .கோபம் ஆக்ஷன் கட்சிதாமாக பொருந்தியிருக்கிறார் . இவர் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் சப்பென்ஸ்ட்ராக வேலையில் சேர்கிறார் இவர் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மனைவின் தங்கை ரக்சிதா மஹாலஷ்மி  போலீஸ் யூனிஃ பார்ம் செம ஃபிட்  கம்பீர தோற்றத்துடன் புல்லட் பைக் ஓட்டி பணிக்கு வருவார் : கொலையாளியை பிடிக்க ஆர்வமும் வேகமும் முயற்ச்சியம் எல்லோரின் கவனத்தை ஈர்க்கிறது. கடமை கன்னியம் கட்டுபாடு என்ற தாரக மந்திரமாக தன் பணியை செய்கிறார்.

அபி நட்சத்திரா வின் நடிப்பு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது வேலை செய்யும் இடத்தில் முதலாளியம்மா  உடுத்தும் ஆடையை பார்த்து ஏங்குவதும் அதே ஆடையை முதலாளியம்மாவிடம் இருந்து பெருவதும்  உடுத்தி மகிழ்வதும் கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க கதறி அழும் காட்சி ஏழை பெண்ணின் உணர்வு நடிப்பின் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார் …

அம்ரிதா ஹல்டர் .. கவர்ச்சி ஆடையில் மார்டன் பெண்ணாக நடித்து இளம் வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை ரசிகர்களாக கவர்ந்து இருக்கிறார் அவரவர் இஷ்டம் போல் ஆடை உடுத்தலாம் மற்றவற்றை பற்றி கவலை படாத பெண்மணியாக தன் சந்தோஷம் தான் முக்கியம் இருப்பவள்  அப்பாவி பெண்ணின் மரணத்திற்க்கு நானும் ஒரு காரணம் இருக்கலாம் ? என்று உணர்ந்து வருந்தும் காட்சி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிப்பு மூலம் வெளிபடுத்தியுள்ளார். மற்றும் இதில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் …

ஒளிப்பதிவு..டிஜே பாலா கதையின் ஒட்டத்திற்க்கு சரியாக இரவு பகலும் ஒளி ஒட்டமும் சிறப்பாக கொடுத்துள்ளார்

இசை எம்.எஸ் ராஜ் பிரதாப் பின்னனி இசை படத்தின் வேகத்திற்க்கு ஈடு கொடுத்து உதவியிருக்கிறது.

எடிட்டர் :ராம் கோபி : தேவையான கட்சிகள் மட்டும் இனத்துள்ளீர்கள் கதையின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்ல பெரும் உதவி செய்கிறது .

இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.

இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா  எக்ஸ்ட்ரீம் சஸ்பென் வை சமூகப் அக்கறையுடன் இன்றைய சமூகத்தில் அவலங்களையும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சஸ்பென்ஸ் /த்ரில்லர் / க்ரைம் .பாணியில் சுவாரஸ்யமும் அடுத்த காட்சி என்ன என்று யாரும் யூகிக்க முடியவில்லை வித்தியாசமான கதை களம் கடைசி வரை கொலையாளி  யார் என்று எதிர்பார்ப்புடன் இழுத்து செல்கிறது அவர் முயற்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டு !

சமூகத்திற்க்கு தேவையான இப்படம் அனைவரும் பார்க்கலாம்