
“
எமன் கட்டளை”
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில்டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.
அன்பு மயில்சாமி கதாநாயகனாக, கதாநாயகியாக சந்திரிகா நடிக்க அர்ஜுனன்,
ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி,டி பி கஜேந்திரன்,நெல்லை சிவா பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா
ஒளிப்பதிவு –
ஏ.கார்த்திக் ராஜா
இசை – என்.சசிகுமார்
பாடல்கள் -சினேகன்
நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ,
மக்கள் தொடர்பு -வெங்கட்
கதை வசனம் -வி.சுப்பையன்
தயாரிப்பு –
டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன்
திரைக்கதை இயக்கம் – எஸ்.ராஜசேகர்
படத்தை பற்றி பேசுவோம்.
–இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள்.இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு
எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான்.பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். இதற்கிடையில் அவளது தாய்மாமனும் கராத்தே ராஜா இவளைத்தான் கட்டுவேன் என்று இவளை திருமணம் செய்து கொள்ள வெறித்தனமாக வந்து அடிக்கடி பொண்ணு கேட்டுகிட்டு மிரட்டியிட்டு போகிறார் .அந்த பெண் தாய்மாமனை கட்டிக்க மாட்டேன் தீர்க்கமா சொல்லிட்டா ! அவளுக்கு அன்பு மீது தான் காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். காரணம் எமனின் கட்டளை ! இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் வந்து விடுகிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா?. இல்லையா? எமனின் கட்டளை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை…
கதாநாயகன் அன்பு மயில்சாமி நடிப்பு டான்ஸ் மிகவும் பொருத்தமாகவும் இருந்தது .
கதாநாயகி சந்திரிகா அளவான நடிப்பு படத்திற்க்கு தேவையான கொடுத்துள்ளார் .
. நடிகர் பட்டாளம் :சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி,டி பி கஜேந்திரன்,நெல்லை சிவா பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா எல்லோரும் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு –
ஏ.கார்த்திக் ராஜா
இசை – என்.சசிகுமார்
பாடல்கள் -சினேகன் .
நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ,
மக்கள் தொடர்பு -வெங்கட்
இப்படத்தில் பணியற்றி அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பான தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
திரைக்கதை இயக்கம் – எஸ்.ராஜசேகர்
இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் துப்பாக்கி, கத்தி /வெட்டு / ரத்தம் – – உடன் நடிக்கும் நடிகை 2PC ஜட்டியுடன் படுகவர்ச்சி உடையுடன் நடிக்கும் கதாநாயகி இல்லாமல் படம் நடிக்க முடியாது என்று சத்தியம் செய்து உள்ளதாக பேசிக்கிறாங்க !
நீங்க இதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லி காமெடி கலாட்ட கதை தேர்வு செய்து உள்ளீர் உங்க படம் குடும்பத்துடன் பார்க்கலாம் ரசிக்கலாம்…










