
இந்தப் படத்தை ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் கதாநாயகனாக ஜெயகிருஷ்ணாவும், நாயகியாசாந்தினியும் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன்தீபா,பாபா,பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
.”காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் – ஜெயகிருஷ்ணா, இசை –என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு –கா.சத்தியராஜ், படத்தொகுப்பு – மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கம் – தேவேந்திரன், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், அசார், சண்டை இயக்கம் –ராம்குமார், வடிவமைப்பு –டிசைன் பாய்ண்ட், தயாரிப்பு . ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ், நிர்வாகத் தயாரிப்பு – மணி தாமோதரன், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.
ஏப்ரல் 5ம் தேதி வெளியாகியுள்ளது ஆலக்காலம் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பாக ஜெனீஸ் வெளியிடுகிறார்.. இவர் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார் மேலும் பெரிய படங்கள் இவருக்கு வர வேண்டும் .
அறிமுக இயக்குநரான ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். தமிழ்த்திரையுலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு இப்படத்தை இயக்குனராக /தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனாகவும் களத்தில் இறங்கியுள்ளார் ஜெயகிருஷ்ணா.
கிராமத்தைச் சேர்ந்த யசோதா என்ற ஈஸ்வரிராவ், தனது கணவன் விஷ சாராயம் குடித்து கணவன் பலியாக, மகனைப் ஒழுக்கமாக நேர்மையாக வளர்த்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற லட்சிய வைராக்கியத்தில் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரிராவ் குடிகாரன் வாசனையும் அவர்களின் முகத்தில் முழிக்ககூடாது ,ஊர் எல்லை சாமி படையலுக்கு சாராயம் வைக்க சொல்லி பூசாரி கேட்க வைக்க மாட்டேன் அப்படியே படையல் போடு ! என்று கூற இப்படி கிராமத்தில் வாழ்க்கை நகர்கிறது
கிராமத்தில் கூலி வேலை பார்த்து பல சிரமத்துடன் படிக்க வைத்து ஆளாக்கிறார் .சென்னை பொறியியல் கல்லூரியில் மகனை சேர்கிறார்.
(ஜெய கிருஷ்ணாவும்) ஜெய் கிராமத்து மண்வாசனை மாறமல் கிராமத்து இளைஞனாக இவர் அழகில்லை என்றாலும் இவரின் திறமை ஒழுக்கம், கல்வி இவற்றில் சிறந்து விளங்கும் மாணவனாகத் கல்லூரியில் பெயரெடுக்கிறான் உடன் படிக்கும் பணகார மாணவி சாந்தினி அவனை விரும்பி காதலிக்கிறாள் ஏற்கனவே அக்கல்லூரியில் ஒருதலை காதலாக, பணக்கார மாணவன் சாந்தினியை காதலிக்கிறான் அதே கல்லூரியில் சக மாணவர்களுக்கு ஜெய், சாந்தினியின் காதல் பொறாமையை ஏற்படுத்த…கல்லூரி நண்பர்களின் சகவாசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கு அடிக்க ஜெய்யை குடிகாரனாக ஆக்குகிறார்கள் சாந்தினி தன் அப்பா அம்மா எதிர்ப்பு மீறி ஜெய்யை திருமணம் செய்து கொள்கிறாள் கல்லூரில் நடந்த சம்பவங்களால் இருவரும் கல்லூரில் படிப்பை தொடர முடியவில்லை மிடில்கிளாஸ் வாழும் பகுதில் குடியேறுகிறார் ஜெய் வேலை தேடி அலைகிறார் வேலை கிடைக்கவில்லை. குடிப் பழக்கத்துக்கு ஆளாகும் ஜெய் அதிலிருந்து மீள முடியாமல் பெருங்குடிகாரனாக ஆகி விடுகிறான் ஒருகாலை இழக்கிறான், சாந்தனியிடம் ஜெய் ஒரு வேண்டுகோள் வைக்கிறார் இங்கு நடக்கிற எந்த விஷயத்தையும் என் அம்மாவிடம் சொல்லக்கூடாது? தாய்க்கு தெரிந்ததா.? குடிகாரன் திருந்தினானா? குடியால் குடும்பம் என்ன ஆனது? ஒரு காலை எப்படி இழந்தான் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
ஜெய் ,சாந்தினி நடிப்பு இடைவேளைக்கு முன்பு வரை .இவரது நடிப்பும் கவரவில்லை
கதையின் நாயகன் ஜெய் முழு குடிகாரனாக மாறிய பிறகு வீட்டில் மனைவிக்கு தெரியாமல் பணம் , செல்போன் எடுத்து டாஸ்மாக் கடையில் கொடுத்து குடிக்கு அடிமையானவர்களின் அச்சு அசலாக பிச்சைக்காரனை போல டாஸ்மாக் கடைக்குள்ளேயே ஓசி சரக்கு ஏங்கி கேட்பதும், ஊனமான பின்பும்கூட தவழ்ந்த நிலையிலேயே பிச்சையெடுத்துக் குடிப்பதும், இப்படியெல்லாம் இருக்கிறார்களா? நமக்கு கேள்வி எழுகிறது !இருக்கிறார்கள் நம் வீட்டருகே நாம் செல்லும் சாலை வீதிகளிலும் பார்க்கலாம் இந்த கொடுமையான கொடூரமான காட்சிகளை குப்பையில் கிடைக்கும் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் கப்புகளிலும் இருக்கும் ஒரு துளி மதுவை குடிச்சி சுவைக்கும் காட்சி மற்ற எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டார்கள் ஜெய் இன்னொரு முறை பாராட்டலாம்..! திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.
தமிழ் எனும் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சாந்தினி பணக்கார கல்லூரி மாணவியாகவும், வறுமையில் வாழும் மனைவியாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும், மூன்றுவிதமான தோற்றங்களில் தாய், தந்தையை விட்டுவிட்டு காதலனை நம்பி வந்து, அந்தக் காதலனும் குடிக்கு அடிமையான வன் கதி என்று கிடக்க.. தனது பரிதாபமான நிலைமையை பல காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார் சாந்தினி. தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்
ஜெய்யின் தாய் ‘யசோதை’யாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் தனது அனுபவம் மிக்க நடிப்பை கொடுத்துள்ளார். தாய்ப் பாசத்தின் உச்சத்தை தொட்டுள்ளார் கிராமத்தில் அவர் பேசும் பேச்சு, நடை, உடை பாவனை வயலில் இறங்கி வேலை செய்யும் காட்சி மட்டுமல்ல ஊர்மக்களிடம் தன் பிள்ளை பற்றி பெருமை பேசறதும் .. சிட்டியில் வந்து கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாரத ஒன்று படம் பார்ப்போரையும் தனது வெறிதனமான நடிப்பால் அலற விட்டியிருப்பார் .. இவருக்கு பாராட்டுகள்
குடிகார கணவனால் பெண்களின் நிலை அறிந்து அவருக்கு உதவும் பக்கத்து வீட்டு அக்காவாக தீபா ஷங்கர் சரியாக தன் பங்களிபபை கொடுத்திருக்கிறார்.. ஜெய் ,சாந்தினி குடும்ப வறுமையின் காரணமாக கருவில் குழந்தை கலைக்க சொல்லும்போது … அவர் பேசும் காட்சிகள் கண் கலங்க வைக்கும். படத்திற்க்கு இவர் மிகவும் பிளஸ்ஸாக உள்ளார்.
சத்யராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. எடிட்டர் காசி விஸ்வநாதன் தன் பணியை சிறப்பாக நேர்த்தியாகவும் செய்துள்ளார்.
ரகு நந்தனின் இசையில் பாடல் வரிகள் புரியும் வகையில் இருப்பது சிறப்பு.. பின்னணி இசையும் அருமை..
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
இதில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக தன் பக்களிப்பை கொடுத்துள்ளனர்.
இதுவரை :. சாராய குடியால் சீரிழியும் குடும்பங்கள் பற்றி பல சினிமா படங்கள் வந்தாலும் இந்த படம் அப்படி அல்ல!
மதுவால் நல்..உடலையும் சீரழித்துக் , உற்றார் உறவுகளையும் நண்பர்களையும் தொலைத்து குடிகாரன் என்ற அடையாள பெயருடன் வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு சமர்ப்பணம்..
இப்படம்
சிறியவர்களை தவிர்த்து அனைவரும் ஒரு முறை பார்க்கலாம் உங்களுக்க கண்டிப்பாக. பிடிக்கும் …
ரேட்டிங் : 3:5










