Sunday, June 21

“ஆட்டி” திரை விமர்சனம்.

நடிகர்கள்:-இசக்கி கார்வண்ணன் – போலீஸ் இன்ஸ்பெக்டர் (அமைதி ராஜ்)

அபி நட்சத்திரா – (அழகு )பழங்குடிப் பெண் அழகு,பிரவீன் பழனிசாமி – பள்ளி ஆசிரியர் செல்வம்,காதல் சுகுமார் – காவலர் விடியல்,செல்வகுமார் – காவலர் குப்புசாமி,சௌந்தர் – கிராமத்து தபால் காரர்,குயிலி நாச்சியார் – மருத்துவச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்குனர்: கிட்டு
திரைக்கதை: திருமுருகன்
இசை: தீசன்
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
படத்தொகுப்பு: சி.எம். இளங்கோவன்
மக்கள் தொடர்பு: ஏ. ஜான்.

கதைகரு 

சிறுதெய்வ வழிபாடு மற்றும் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசுகிறது

படத்தை பார்ப்போம்

’.கதை 1970-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி மற்றும் தேயிலைத் தோட்ட மக்கள் வாழும் ‘கோடை மலை’ கிராமத்தில் நடக்கிறது இந்த ஊரில் இடமாற்றம்  பெற்று செல்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன். இவர் அநீதிகளை பொறுத்துக் கொள்ள மாட்டார். தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்து விடுவார் நேர்மையான போலீஸ் அதிகாரி

இந்த கிராமத்திற்க்கு அபிநட்சத்திரா மட்டும் கொஞ்சம் படித்த பெண் இவர் முயற்சியில் கொட்டகை அமைத்து இங்கு பழங்குடி மக்களின் குழந்தைகளை பாடம் சொல்லி கொடுத்து வருகிறார் அதே நேரத்தில்  பள்ளி ஆசிரியர் தேவையென்று அரசுக்கு மனு போட்டுயிருந்தார் இந்த சூழ்நிலையில் இதே கிராமத்திற்க்கு ஒரு பள்ளிக்கு  ஆசிரியர் மதுரையில் இருந்து பணிக்காக வருகிறார்.  இவர்  அபிநட்சத்திராக்கு வலைவீசுகிறார் பணியில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க  இன்ஸ்பெக்டர் இசக்கி தொடங்குகிறார் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த கிராமத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள மதுரைக்கு சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது இப்போது நடந்துள்ள கொலைக்கும் 150 வருடத்திற்கு முன் நடந்த சில சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். அது என்ன? பள்ளி ஆசிரியர் கொலை செய்தது யார் இன்னும் பல திருபங்களுடன் படத்தின் மீதிகதை …

இசக்கி கார்வண்ணன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்கள் நம் கண் முன்னே நிற்கிறார் அளவான நடிப்பு சிறப்பாக நடித்துள்ளர்.

முதன்மை கதாபாத்திரத்தில் அபிநட்சத்திரா பழங்குடி பெண்ணாக வாழ்ந்திருகிறார் மற்றும் ஐந்து வீர மங்கை பெண்கள் , டீ தேயிலை ஸ்டேட் முதலாளி . பள்ளி ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி சிலகாட்சி வந்தாலும் நம் மனதில் நிற்கிறார்  மற்றும் இப்படத்தில்  நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளர்

அழகான கொடைக்கானல் மலை கிராமங்கள், இயற்கையோடு சேர்ந்து வாழும் மக்கள், ஒரே பள்ளி, ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு தபால் நிலையம் என்று ஒரு அழகான மலை கிராமத்தை கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள் சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு சிறப்பு ,

பின்னணி இசை தீசன் ஒரு த்ரில்லர் அனுபவத்தை தருகிறது.

எடிட்டர்: சி.எம். இளங்கோவன் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்

பெண்களின் பாதுகாப்பை பற்றி நாம் பேசி வருகிறோம். 150 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் பாதுகாப்பிற்காக பெண்களே  தெரிய வீர பெண்ணாக  வாழ்ந்துயிருக்கிறார் அவர்களே சிறுதெய்வங்களாக  இன்றும் வழிபடுகிறார்கள் இதுவரை யாரும் சொல்ல யோசிக்க முடியாத ஒரு விஷயத்தை படத்தில் சொல்லி இருப்பதற்கு டைரக்டரை பாராட்டலாம்.

மொத்ததில் இப்படம் அனைவரும பார்க்கும் படமாக உள்ளது

ரேட்டிங் 2.5