Thursday, April 16

“மாயபிம்பம்” திரை விமர்சனம்.

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில் உருவாகி, KJ சுரேந்தர் தயாரித்தும் இயக்கியும்   வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘’மாயபிம்பம் இந்த படத்தில், புதுமுகங்கள்  ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன் உள்ளிட்ட பலர் நடிகர்கள் மற்றும் இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

கதைகரு:.

கிரமத்து மருத்துவ மாணவன் சிறைகைதியானன் அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ..

படத்தை பார்ப்போம்:

2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது

கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான்கு இணைபிரியாத நண்பர்கள் அதில்  ஆகாஷ் மருத்துவ மாணவன்  வீட்டில் அனைவருக்கும் செல்ல பிள்ளை , இன்னெருவன் கேபிள் டிவி நடத்துபவன் மற்ற இருவர்கள் வேலையில்லாதவர் இவர் ஒன்று சேர்ந்தால் பெண்கள் பற்றி அதிலும் குறிப்பாக கேபிள் டிவி நடத்துபவன் சரியான பொம்பளை பொருக்கியாக  இருப்பான் பார்க்கிற பெண்களை தவறான  கண்ணோட்டத்தில் கருத்து கணிப்பு ,மீட்டர் சொல்லுது அதாவது இவள் நமக்கு கிடைப்பா அல்லது அவனுக்கு கிடைப்ப இவன் சொல்வது 90% நடக்கும் இப்படி ஜாலியாக கிராமத்தில்  சுற்றி திரிகிறார்கள். மருத்துவ மாணவன் ஆகாஷ் பஸ்ஸில் கிரமத்து அழகு தேவதை ஒருத்தியை  பார்க்கிறான் இவன் மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறது அவளை காதலிக்க தொடங்குகிறான் அவளும்  இவனைக் மனதிற்குள் காதலிக்கிறாள்  இவனுடை கேபிள் டிவி நண்பன் ஆலோசனைபடி ஒரு திட்டம் போடுகிறார்கள் அது என்னவென்றால்  கோயில் வர சொல்லி காக்கவைத்து. கோயில் நடை சாத்திடுவார்கள்  அப்புறம் நண்பனின் Room ரூமுக்கு அழைத்து செல்கிறான் சிறிது நேரம் கழித்து  Room -யை விட்டு ஜானகி வெளி யேறுகிறாள் கொஞ்ச நாளக  இருவரும் சந்திப்பதில்லை  ஆகாஷ்  வீட்டில் இந்த விழியம் தெரிந்து விட்டது இதனால் ஆகாஷ்யிடம் அவனின் அப்பா, அம்மா , அண்ணன் யாரும் பேசுவதில்லை , ஒரு கட்டத்தில் மீண்டும்  ஆகாஷ் வீட்டில் சமரசம் ஆகியது ஜானகியை வீட்டுக்கு அழைத்து வருமாறு குடும்பத்தார் சொல்கிறார்கள் ஜானகியை தேடி ஆகாஷ் செல்கிறார்  ஜானகி பார்த்தும் , ஆகாஷ்க்கு  அதிர்ச்சி காரணம் ஜானகி மரண படுக்கையில் இருக்கிறாள் நடந்தது என்ன? மரண படுக்கை காரணம் யார் ? ஜானகியை ஆகாஷ்  நண்பனின் ரூம் Room க்கு அழைத்துச் செஏன்றது ஏன் ?சிறைக்கு போனானது ஏன் ? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை…

ஜானகி, ஆகாஷ் நடித்திருக்கிறார்கள். உண்மையான காதலர்களாகவே வாழ்கிறார்கள், படத்தில்

நாயகி ஜானகி  கருப்பாக இருந்தாலும் அழகாக   களையாக இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார் .அதுவும் அந்த இறுதிக் காட்சியில்  பாராட்டுக்குரியது.

மருத்துவ மாணவனாக ஆகாஷ். ஜானகியை காதலித்து இறுதிக் கட்சியில் அழுது புரண்டு தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகனின் குடும்ப உறுப்பினர்கள் – அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, குழந்தை என பாசகார குடும்பம் ஒவ்வொருவரும் கதைக்கு சரியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்  . நாயகியின் தோழி மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றும் அனைவரும்  படத்திற்கு உயிர் ஊட்டுகிறார்கள்.குறிப்பாக நாயகி ஜானகி மற்றும் நடிகர்கள் பாராட்டலாம்

இந்தப் படத்தின் முதுகெலும்பு ஒளிப்பதிவாளர்.எட்வின். இசையமைப்பாளர் நந்தா பங்களிப்பு பெரிய பலம் படத்தோடு நம்மை ஒன்ற வைத்துள்ளது.

படத்தொகுப்பாளர் வினோத் படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார். மற்றும் இப்படத்தில் பணியாற்றி அனைவரும் சிறப்பு.

இயக்குநர் கே.ஜே. சுரேந்தரின் முற்றிலும் புதுமுகங்கள் வைத்து குறைந்த பட்ஜெட்டில் அழகான காதல் கதை  திரைகதை மனதை தொடுகிறது இப்படத்தில் கத்தி, ரத்தம் சொட்ட தலையை வெட்டு  வன்முறை ரவுடிசம்  ,ஆபாசம் , கத்தியின்றி ரத்தம்யின்றி  இப்படம் பேசுகிறது வயது வந்த  இளைஞர்கள் அனைவரும்  பார்க்கலாம். இயக்குனர்க்கு  தமிழ் திரையுலகில் கவனிக்கப்படுகிறது நல்ல எதிர்காலம் உள்ளது