Sunday, May 31

“அனந்தா” திரை விமர்சனம்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  ’, புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின்  மகிமையையும், அவரது பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த  அற்புதங்களை மையமாகக் கொண்டு உருவான ஆன்மிகத் திரைப்படம்.

மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம். “ஆனந்த ” நடிகர்கள் :ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  :தொழில்நுட்ப கலைஞர்கள்:  இசை: தேவா, ஒளிப்பதிவு: சஞ்சய் பி.எல், எடிட்டிங்: எஸ் ரிச்சர்ட், ,வசனங்கள் – பாடல்கள்: பா விஜய் மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது, பராஸ் ரியாஸ்

கதை கரு

ஜெகபதி பாபு Y.G மகேந்திரன் , தலைவாசல் விஜய் ,சுகாசினி ஆகியோர் வாழ்க்கையில் சாய்பாபா ஏற்படுத்திய அற்புதங்களை சொல்கிறது.

படத்தை பார்ப்போம்:அனந்த பக்தி கதை புட்டபர்த்தி மருத்துவமனையில் தொடங்குகிறது கதையின் முதன்மை நாயகனாக ஜெகபதி பாபு தொழிலதிபர் இவர் பணம், உழைப்பு என திரிந்து கொண்டிருப்பார் அப்போது அவர் பகவான் அருளால் உண்மையான பக்தி பாதைக்கு மாறுகிறார். அதே நேரத்தில்,   கொள்ளைச் செயலில் ஈடுபடும் ஆட்களை ஆன்மிகம் பாதையில் கொண்டு வர முயற்சிக்கிறார், இரண்டாவது பக்தர் சாய்பாபா வின் தீவிர பக்தர் பாபாவை வழிபடும் போது மனைவி திடீர் மயங்கி விழுந்து இறந்து விடுகிறார் அவர் வாழ்வில் சில மாற்றங்கள் நடக்கிறது … மூன்றாவது பக்தர் , மகன் மரணப்படுக்கையில் இருக்க கடவுளிடம் மன்றாடும் சுகாசினி..

நான்காவது பக்தர் நடன கலைஞரான அபிராமி  வெங்கடாசலத்துக்கு டான்ஸ் நிகச்சிக்கு முன்  நடந்து சோதனை

பக்தியுடன் அழைக்கும்  ஒரு சிறுமிக்கு சத்யசாபா காட்சி கொடுத்தாரா? இல்வையா? படத்தின் மீதி கதை ..

தொழில் அதிபராக கடவுள் பக்தியால் மனம் மாறி நல்லது செய்பராக ஜெகபதி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார்
பகவான் பக்தராக மாறுபவராக ஓய்.ஜி. மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.
கோடிக்கணக்கான உண்மையான பக்தர்களின் பிரதிநிதியாக சுகாசினி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
டான்ஸ் ஆட முடியாமல் தவிப்பராக உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார் அபிராமி. அமெரிக்காவில் வசிப்பவரும் பாபாவின் அருளை எப்படி பெறுகிறார்கள் என்ற கேரக்டரில் இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இசை: தேவா, ஒளிப்பதிவு: சஞ்சய் பி.எல், படத்திற்க்கு பெரிய பலம்.எடிட்டிர் எஸ் ரிச்சர்ட் .. படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார்.வசனங்கள் – பாடல்கள்: பா விஜய் கேட்க்கும் படியாக ரசிக்கும்படியாகவும் இருந்தது

அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற வணிக ரீதியான ஆக்‌ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் வேறுபட்ட ஆன்மிகப் பாதையில் பயணித்துள்ளார்.பல காட்சிகள்  மெய்சிலிர்க்க வைக்கும் வகையில்
எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

…..

Related posts: