
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாம் இந்தியா சார்பில் ஐசரி கே. கணேஷ், அனீஷ் அர்ஜுன் தேவ் தயாரித்திருக்கும் அகத்தியா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எழுத்தாளர் பா.விஜய்.
இதில் ஜீவா, ராஷி கன்னா, அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, எட்வர்ட் சோனன்ப்ளிக், மட்டில்டா, ரோகிணி, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: யுவன் ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவாளர் -தீபக் குமார் பதி, எடிட்டர் – சான் லோகேஷ், கலை இயக்குனர்- பி.சண்முகம், நடன இயக்குனர் -கலைமாமணி ஸ்ரீதர், உடை வடிவமைப்பாளர்- பல்லவி சிங், டினா ரொசாரியோ, ஒலி கலவை- தபஸ் நாயக், பாடல்கள் – பா.விஜய், தலைமை இணை இயக்குநர்- எஸ்.குரு சூர்யா, நிர்வாக தயாரிப்பாளர்- அஸ்வின் குமார், படைப்பு தயாரிப்பாளர்- பிரபு, விளம்பர வடிவமைப்பாளர்- தினேஷ் அசோக், பிஆர்ஒ- நிகில் முருகன்..
பாண்டிச்சேரியில் உள்ள பாழடைந்த பங்களாவுக்கு கலை இயக்குனராக இருக்கும் நாயகன் ஜீவா படப்பிடிப்புக்காக செல்கிறார். அங்கு சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு நடக்காமல் போகிறது. இதனால் வருத்தம் அடையும் ஜீவா, தன் காதலி நண்பர்கள் ஷாரா ,இந்துஜா இவர் இவர்களுடன் இணைந்து பணம் சம்பாதிக்க வித்தியாசமான புதிய (scary House) ஸ்கேரி ஹவுஸ் அனைவரும் கவரும் வகையில் உருவாக்கபட்டு மக்கள் வரவேற்பு பெற்றது. இந்த ஹவுஸில் ஒரு இளைஞன் திடீர் மர்மமாக காணமல் போகிறார்..ஸ்கேரி ஹவுஸில் தீய அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறப்படுகிறது இதனால் அரசாங்கம் ஸ்கேரி ஹவுஸ் மூடச் சொல்லி உத்தரவு விடுகிறது மூடப்படுகிறது. இதற்கிடையில் காணமல் போன இஞைனை கண்டுபிடிக்க ஜீவா ஸ்கேரி ஹவுஸ் போகிறார் அங்கே ஒரு பழைய பிலிம் ரோல் கிடைக்கிறது அதில் 1940 ம் வாழ்ந்த அர்ஜுன் சித்த மருத்துவராகவும் அன்றைய காலகட்டத்தில் பிரெஞ்சு நாட்டு அதிகாரியின் தங்கை க்கு எலும்புருக்கி (கேன்சர் )நோய் குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் இருந்து இருகிறார் அவர் திடீரென கொள்ள படுகிறார் அர்ஜுன் அவர் சம்பதமான சில தகவல்கள் கிடைக்கிறது இறுதியில் ஸ்கேரி ஹவுஸை ஜீவா திறந்தாரா? ஸ்கேரி ஹவுசில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் கதாநாயகனாக அகத்தியனக ஜீவா நடித்து இருக்கிறார் தாய்க்கா அமானுஷ்ய சக்தி களை எதிர்த்து போராடும் நாயகனாக இருக்கும் ஜீவா, துறுதுறு இளைஞனாக நடித்து கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அம்மா பாசத்தில் நம் அனைவருக்கும் மனதையும் நெகிழ வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ராஷி கண்ணா அழகாக வந்து சென்றிருக்கிறார். இவருக்கு அதிகம் வேலை இல்லை.
அர்ஜுன் சித்த மருத்துவராக வரும் ,
.இவரது அலட்டல் இல்லாத நடிப்பு மறுபதிப்பு பாடல் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. ஆங்கிலேயர்கள் கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ராதாரவி
ஆங்கிலேயர்களின் உதவியாளராக வேலை பார்த்தாலும் நக்கல் நையாண்டி எந்த கதாபாத்திரமும் சிறப்பாக ராதாரவி அசத்தியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி காமெடி சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் நமக்கு சிரிப்பு வரவில்லை. செந்தில், யோகிபாபு , விடிவி கணேஷ், இந்துஜா, பூர்ணிமா பாக்யராஜ், தங்களுக்கு கொடுத்து கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்.
ரோகிணி (ஜீவா அம்மா) கதாபாத்திரத்தின் காட்சிகள் சிறப்பாக நடித்து நம் அனைவரும் மனதிலும் இடம் பெற்றுள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் படியாகவும் ரசிக்கும் படியாகவும்.. “என் இனிய பொன் நிலாவே” மறுபதிப்பு 🎶🎤 ரசிக்கும் படியாகவும் இருந்து பின்னனி இசை படதிற்கு பலம.
ஒளிபதிவு :தீபக் குமார்பதி மற்றும் கம்யூட்டர் கிராபிக்ஸ்: படத்திற்கு இன்னொரு பலம்
எடிட்டிர் :சான் லோகேஷ் படத்திற்கு தேவையான காட்சி மட்டும் கொடுத்து உள்ளார் படத்தின் ஓட்டத்திற்க்கு சிறப்பாக இருந்தது.
இன்று தமிழ் சினிமாவில் பெரிய, நடிகர்கள் ரோல் மாடலாக இருப்பவர்கள் கத்தி, ரத்தம் கதையை தான் தேர்வு செய்து நடிக்கிறார்கள் : வருங்கால இளைய சமுதாயத்தை கெடுக்கும் விதமாக தான் உள்ளது.
புதிய கதை களத்துடன் ,ஹாரர் கதையான இந்தப் படத்துக்குள், , த்ரில்லர், பழிவாங்குதல், சித்த மருத்துவம், அம்மா சென்டிமென்ட், “அகத்தியா” இந்த படம்இயக்குனர் பா விஜய் இயக்கியுள்ளார் எல்லோரும் ரசிக்கும் படமாக இருக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக உள்ளது குடும்பத்துடன் பார்க்கலாம்.










