இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார்.
படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோகர், இந்துமதி, மரியம் ஜார்ஜ், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், பிரதீப் ஈ. ராகவ் படத் தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. நிர்வாக தயாரிப்பாளர்: எஸ்.எம். வெங்கட் மாணிக்கம், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
லவ் டுடே என்ற ஒரே ஒரு படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் ஆகும் .
இன்றைய 2.கே கிட்ஸ்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஒரு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஓ மை கடவுளே படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து.
டி.ராகவன் என்ற பெயர் ஹீரோ பிரதீப், பள்ளியில் முதல் மாணவனாக வந்தவர். பிளஸ் டூவில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராக வந்தவர். அவருடைய கெட்ட நேரம்.. பரிசாக கழுத்தில் விழுந்த தங்கச் சங்கிலியுடன் தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணிடம் வந்து தான் அவளைக் காதலிப்பதாக சொல்கிறார்.
ஆனால் அந்த மாணவியோ ஒரு ரவுடியை அடையாளம் காட்டி “எனக்கு அவனைப் போன்றவர்களை மட்டுமே பிடிக்கும். அதனால் அவனைத்தான் காதலிக்கிறேன். நீ எனக்கு வெறும் நண்பன் மட்டும்தான்..” என்று சொல்லி உதாசீனப்படுத்துகிறார்.
இதைக் கேட்டவுடன் பிரதீப்பின் மனமும், குணமும் ஒரே நிமிடத்தில் மாறுகிறது. பெண்களுக்கு ரௌடியாக இருந்தால் மட்டும்தான் பிடிக்கும் போலிருக்கிறது என்று நினைப்பவ கல்லூரி படிப்பில் ரௌடியாக மாறுவதாக உறுதி கொள்கிறார்.
சொன்னது போலவே வேலூரில் இருக்கும் ஏ.சி.எஸ். கல்லூரியில் பி.டெக். மாணவராக சேர்கிறார் பிரதீப். இப்பொழுது அவருடைய பெயர் டி.ராகவன் அல்ல. அதில் சில மாற்றங்களை செய்து டிராகன் என்று ஒரு பெயரெடுத்து கல்லூரியில் மிகவும் ஃபேமஸான ரவுடியாக வலம் இருக்கிறார். கடைசி ஆண்டில் 48 அரியர்ஸ்களை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடன் படிக்கும் அனுபமா பரமேஸ்வரனையும் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறார் டிராகன். கல்லூரியில் இவருடைய அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் கல்லூரி பிரின்சிபாலான மிஷ்கின், இவரை கல்லூரியில் இருந்து வெளியேற்றுகிறார்.
வெளியில் வந்தவர் “கல்லூரி படிப்பை நான் முடித்துவிட்டேன். சர்டிபிகேட் இன்னும் தரவில்லை..” என்று வீட்டில் பொய் சொல்கிறார். ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்லிவிட்டு தன்னுடைய நண்பர்களின் வீட்டில் அமர்ந்து கொண்டு தண்ணியடித்துக் கொண்டு சிகரட்டை குடித்துக் கொண்டு போக்கிரித்தனமாக வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய நண்பர்களிடமே 18,000 ரூபாயை கடனாகப் பெற்று அந்த பதினெட்டாயிரம் ரூபாயை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் அந்த செலவு இந்த செலவு என்று சொல்லி அந்த 18,000 அப்படியே வாங்கிக் கொண்டு வந்து தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது காதலி அனுபமா தனக்கு வேறு ஒரு ஆளோடு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று சொல்லி அவரிடம் இருந்து விடைபெறுகிறார். இது பிரதீப்பின் மனதை மிகவும் சோகமாக்குகிறது. வலியை உண்டாக்குகிறது.
அனுபமாவின் வருங்கால கணவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்பதால்தான் தன்னை அனுபவமாக கைவிட்டுப் போனதாக பிரதீப் நினைக்கிறார். அதனால் அந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போக முடிவெடுக்கிறார்.
இது போன்ற வேலையை வாங்கித் தரும் ஒரு ஏஜென்சியை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து போலியான பி.டெக். சர்டிபிகேட் கொடுத்து போலியான இண்டர்வியூவை அட்டென்ட் செய்து வேலைக்கு செல்கிறார்.










