
ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் நீ ஃபாரெவர் (Nee Forever) படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அசோக்குமார் கலைவாணி
நடிகர்கள் :அஜய் – சுதர்சன் கோவிந்த், மதி – அர்ச்சனா ரவி, ராக்கி – பிராது (பிரதோஷ்), குக்கி – நோபல் ஜேம்ஸ், ரேவதி -வித்யா, ஆறுமுகம் – ஒய் ஜி மகேந்திரன், யோகி – நிழல்கள் ரவி, மற்றும பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: அஸ்வின் ஹேமந்த், ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி, எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்,, பிஆர்ஒ – ஏய்ம் சதீஷ்.
படத்தை பார்ப்போம்:
கதாநாயகன்(சுதர்சன் கோவிந்த்) அமமா காதலனுடன்(நிழல்கள் ரவி) போதிய வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் தோற்று கணவனுடன் வாழ முடியாமல் அப்பா YG மகேந்திரனிடம் வாழ்ந்து வருகிறார். தன் இஷடப்படிதான் வாழவேண்டும் என்ற கண்டிஷனுடன். மகளின் குழந்தையை YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார்.காதல் திருமணத்தை வெறுக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் பற்றிய App (செயலி) உருவாக்கும் நோக்கில் போலியாக காதலிக்க முடிவு செய்கிறார். மறுபக்கம், குடும்ப வாழ்க்கையை நம்பாத நாயகி அர்ச்சனா ரவி, சினிமாபட இயக்குநராக முயற்சிக்கிறார். அவருக்கு “காதல் கதை கொண்டு வாருங்கள் படம் பண்ணலாம்” என்று வாய்ப்பு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஹீரோவும் ஹீரோயினியும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழகுகின்றனர் போலி காதலில் ஈடுபடுகிறார். இவ்விருவரும் சந்தித்து தொடங்கும் இந்த போலியான காதல், இருவரும் முடிவில் ஒன்று சேர்ந்தார்களா? அவரவர்கள் ஆசை நிறைவேறியதா? அவர்களது வாழ்க்கையையே எப்படி மாற்றியது என்பதையை பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.. அர்ச்சனா ரவி கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார். கண்டிப்பான தாத்தாவாக YG மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.
பிரது, நோபி ஜேம்ஸ், வித்யா, நிழல்கள் ரவி ரேதிகா சீனிவாஸ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அஸ்வின் ஹேம்நாத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
காதலை நம்பாத இரு மனிதர்கள், போலியான காதல் மூலம் உண்மையான உணர்வுகளை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. திரைக்கதையில் வித்தியசம் புதுமை . போலியான காதல் உண்மையாக மாறும் தருணங்கள் படத்தை சுவாராஸ்யமாக எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இவருடைய முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
வயது வந்த அனைவரும் பார்க்கலாம்










