Thursday, September 10

“வேம்பு ” திரைப்பட விமர்சனம்.

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் ஷ_ர்ஸ், எஸ் விஜயலட்சுமி தயாரித்து ஷீலா, ஹரி கிருஷ்ணன், மாரிமுத்து ,ஜானகி, கர்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் வேம்பு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜஸ்டின் பிரபு .வி

தொழில் நுட்பகலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஏ.குமரன், கலை இயக்குனர் – கோபி கருணாநிதி, பாடகர் – அந்தோனி தாசன், மணிகண்டன் முரளி, ,​ இசை – மணிகண்டன் முரளி, எடிட்டிங்- வெங்கட்ரமணன் ,பிஆர்ஒ- ஜான்.

படத்தின் கரு :சிலம்பாட்டம் தற்காப்புகலை பெண்களுக்கு தேவை  அவசியத்தையும்  சொல்லும் படம் …

படத்தை பார்ப்போம்:

ஒரு அழகிய கிராமம் படத்தின் கதாநாயகி வேம்பு (ஷிலா ) பள்ளி படிப்பை முடித்து  தற்காப்புகலை சிலம்பாட்டம் கற்று கொண்டு ஊரில் நடக்கும் சிலம்பாட்டம் போட்டில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றார்.. அடுத்தது மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் லட்சிய கனவாக வாழ்கிறாள் – அதே ஊரில் கதாநாயகன் ஹரிகிருஷ்ணன் புகை பட கலைஞர் Photo Studio நடத்தி வருகிறார் இவர் வேம்புயின் தாய்மாமன் ஆவார். இருவரும் நன்றாக பழகி கொள்கிறார்கள் இவருக்கு வேம்பு மீது காதல் வேம்பு கண்டும் காணாமல் இருக்கிறார் அவளுக்கு மாநில சிலப்பாட்டம் போட்டி கலந்து வேண்டும் என்ற ஆசை கனவோடு இருக்கிறாள். ஊர்கார்கள் பேச்சால் வேம்புவின் அப்பா வேம்புக்கு தாய்மாமன் ஹரிகிருஷ்ணக்கும் திருமணம் இனிதே நடந்தது. திருமணம் ஆன மறுநாளே கதாநாயகனுக்கு ஒரு விபத்தில் இரண்டு கண்பார்பையும் இழக்க நேரிட்டது இதனால் வேம்பு மீது மொத்த குடும்ப பாரசுமை சுமக்க நேரிடுகிறது. – ஜெராக்ஸ் கடை வேலைக்கும் போகுகிறாள் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் கடையில் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் இதனால் கடை முதலாளி வேம்புபை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்… ஒரு பக்கம் குடும்பம் வறுமையில் இருக்கிறது கணவனுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க போராடுகிறாள் அவருக்கு கண்பார்வை கிடைத்ததா? வேம்பு சிலம்பாட்டம் மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்ட ரா ? குடும்பபார சுமையிலிருந்து மீண்டு வந்தாரா! என்பது தான் படத்தின் மீதி கதை…

கதாநாயகி வேம்பு (ஷிலா ) : கண்பார்வை இழந்த கணவன் மாமா , மாமியார் குடும்பம் மீது அக்கறை காட்டுவதும்  பாசத்தை கொடுப்பதும் கிரமத்து பெண்ணாக-மண் வாசனையுடன் வாழ்ந்து இருக்கிறாள் இன்னொரு ரேவதி வந்தது போல் இருந்தது.

கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் வேம்புக்கு ஆறுதலான வார்த்தை நம்பிகை கொடுத்தது நடிப்பு சிறப்பாக இருந்தது .
இவர்களின் அப்பா அம்மாவாக நடித்த கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது மற்றும் மறைந்த நடிகர் மாரிமுத்து M.L.A -வாக நடித்த நடிப்பும் மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர் :
ஒளிப்பதிவு:ஏ.குமாரன் கிராமத்து அழகை. அப்படியே நமக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இசை : மணிகண்டன் முரளி சிறப்பாக இசையமைத்துள்ளார் .

எடிட்டர் : கே ஜே.வெங்கட்ராமன் தேவையான காட்சிகள் இன்னும் படத்தில் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் சில காட்சிகள் எதுக்கு வருகிறது தொடர்பு விட்டு விட்டு வருகிறது .

இயக்குனர் ஜெஸ்டின் பிரபு.வி…தேர்வு செய்து எடுத்த கதை அற்புதம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் ..

இப்படம் குடும்பத்துடன் பார்க்க குறிப்பாக பெண் பிள்ளைகள் அவசியம் பார்கவேண்டிய படம் இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டு …அரசு கவனததிற்க்கு கொண்டு செல்லவும்…