Thursday, April 16

“அம்… ஆ”திரைவிமர்சனம்

மலையாளத்தில் திரைக்கு வந்து சில மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது அம்… ஆ.. என்ற திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.. சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது..

தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தேவதர்ஷினி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்..

கதைகரு :வாடகை தாய் வாழ்க்கை பிரச்சனையும் மற்றும் தாய்மை ஏக்கத்தையும் சொல்லும்  படமாக உள்ளது.

படத்தைப் பார்ப்போம்

கேரளாவில் ஒரு மலைப்பகுதி யாருமே இல்லாத பகுதியில் தன் பேத்தி ஒரு ஊமை அவளுடன் தனியாக வசித்து வருகிறார் யாருடனும் நெருங்கி பழக மாட்டார், தன் பேத்தியை யாரிடமும் கொடுக்க மாட்டார் தேவதர்ஷினி.. அந்த மலைப் பகுதியில் ரோடு போடும் காண்ட்ராக்ட்  சொல்லி திலீப் போத்தன் வருகிறார்.. ஊர் கவுன்சிலர் வீடு வாடகை அமைத்து கொடுக்கிறார் இருந்தாலும் வந்த ரோடு காண்ட்ராக்டர் மக்களுடன் சகஜமாக பழகிக் கொண்டிருக்கும் போது இவர்  வழக்கமான டீ சாப்பிடும் கடையில் கண்ணு தெரியாத முதியவர் காது மட்டும் கேக்கும்  அவர் பெயர் ஆசான் . என்று ஊர் மக்கள் கூப்பிடுவார்கள்  டீ கடையில் ரேடியோ பெட்டியுடன் பாட்டு கேட்டு அமர்ந்திருப்பார் . திலீஷ்போத்தன் ரோடு காண்ட்ராக்டர்  அல்ல என உண்மை அறிந்த  (ஆசான் ) முதியவர் இவரை தாக்குகிறார். இவர் யார் விவரம் தெரிய வருகிறது.. இவர் தேவதர்ஷினியை தேடி வந்ததாகவும் கூறுகிறார்.. அப்படி என்றால் தேவதர்ஷினி யார்? அவருடன் இருக்கும் ஊமை குழந்தை யார்? எதற்காக அந்த மலைப் பகுதி வந்தார்! இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் மீதிக்கதை..

தேவதர்ஷினி இதுவரை  காமெடி கதாபாத்திரம் மட்டும் நடித்த வந்தவர்  இந்த படத்தில் கதாநாயகியாக   தாய்மை  உணர்வுபூர்வமாக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் . பாராட்டு

இயல்பான நடிப்பில் போலீஸ் அதிகாரியாக வரும் திலீப் போத்தன். அசத்தி உள்ளார்

சிறிய கதாபாத்திரத்தில் மீரா வாசுதேவன் மற்றும் உடன் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக இருந்தது

ஆசான்னா முதியவர் , ஊர் மெம்பர் (கவுன்சிலர் ) சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளன

கோபி சுந்தரின் இசை படத்திற்க்கு பக்க பலம் இருந்தது

,அனிஷ் லால் ஒளிப்பதிவு இயற்கையான மலை அழகையும் நம்மை அந்த இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகள் குழந்தை ஊனமாகப் பிறந்தால் அக் குழந்தையை வாங்க மறுக்கும் உண்மையான தாய் தந்தையர்கள் .  வாடகை தாய்மார்கள்  வறுமையில் இருக்கிறார் குழந்தை வளர்க்கவும் முடியாது சூழ்நிலை  வாடகை தாயின் தாய்மை உணர்வான வேதனை என அழுத்தமான திரைக்கதை  யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத கிளைமாக்ஸுடன் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன்

இப்படம் குடும்பஸ்தர்கள்  பார்க்க வேண்டிய படம்

 

Related posts: