Sunday, July 26

“லெவன்” திரை பட விமர்சனம்

ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்திருக்கும் லெவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜ்ல்ஸ்.

இதில்; அரவிந்தனாக நவீன் சந்திரா, சாந்தியாக அபிராமி, போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க், மனோகராக திலீபன், தாராவாக ரித்விகா, சஞ்சனாவாக ரேயா ஹரி, சந்திரசேகராக ஆடுகளம் நரேன், தீரனாக அர்ஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : இசையமைப்பாளர் – டி.இமான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரபு சாலமன், இணை தயாரிப்பாளர் – கோபாலகிருஷ்ணா.எம், ஒளிப்பதிவு இயக்குனர் – கார்த்திக் அசோகன், எடிட்டர் – ஸ்ரீPகாந்த்.என்.பி, கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் – கிருத்திகா சேகர், பாடல் வரிகள் – கபிலன், விஷ்ணு எடவன், லோகேஷ் அஜ்ல்ஸ், பாடகர்கள் – மனோ, ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜோனிதா காந்தி, ஒலி வடிவமைப்பாளர் – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், தயாரிப்பு நிர்வாகி – ஹக்கீம் சுலைமான், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தின் கரு:சிறுவயதில் ஏற்பட்ட  அவமானங்கள் பாதிப்பு அதனால் பழிவாங்கும் கொலை .

படத்தை பார்ப்போம்
சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளை மற்றும் போதை மாத்திரை பதுக்கி வைத்து வியாபாரம் செய்யும் கும்பலை அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்கிறார் போலீஸ் அதிகாரி நவீன் சந்திரா. இன்னொருபுரம் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. கொலை செய்து உடல் எரிந்த நிலையிலே கிடைக்கிறது தடயம் எதுவும் சிக்கவில்லை  கொலைகள் குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.இந்த கேஸை விசாரணை நடத்தி வந்த போலீஸ் அதிகாரி விபத்தில் சிக்குகிறார் இதனால் போலீஸ் கமிஷனரான ஆடுகளம் நரேன்  இந்த கேஸ் நவின் சந்திராவிடம் ஒப்படைக்கிறார் அவர் இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் இன்னும் பல கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது போலீசுக்கு சவாலாக இருக்கிறது இருந்தும் சில தகவல் போலீசுக்கு கிடைக்கிறது  இந்த கொலைகளை செய்தது யார்? இந்த கொடூர கொலைகாரன் யார்? எதற்காக செய்தான்? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஹீரோவான நவீன் சந்திரா  கனகச்சிதமாக அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது  ஒவ்வொரு காட்சியிலும்  தனது நடிப்பின் மூலம் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கிறார் . திலீபன், உதவி ஆய்வாளராக வந்து அசத்துகிறார். அபிராமி கதாபாத்திரம் படத்திற்கு மற்றொரு பலம் தருகிறது .போலீஸ் கமிஷ்னராக ஆடுகளம்’ நரேன் வழக்கம்போல் தன் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்  .இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களான ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாமராஜு, , ரித்விகா, அர்ஜய் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது , ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

எடிட்டர் – ஸ்ரீPகாந்த்.என்.பி, படத்திற்கு தேவையான கட்சிகளை மட்டும்  கொடுத்துள்ளார்.

டி. இமான் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

ஒரு திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இந்த லெவன் படத்தை இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி முடியும் காட்சி வரை.அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை சீட்டில் உட்கார  வைக்கிறார் படம் இரண்டு மணி நேரம் ஓடுவதே தெரியாத அளவிற்கு திரைகதையை கொண்டு போய் உள்ளார் தமிழ் திரை உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது .

படத்தின் கதை கரு  பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அவமானங்களும் வேதனையும் வலியையும் சொல்லும் படமாக இருக்கிறது அதற்காக இவ்வளவு பெரிய கொடூர தண்டனை கொடுக்கணுமா ?

இப்படம் :இளைஞர்கள் .பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படம்