
“நடிகர்கள் :பிரித்திவிராஜ் ராமலிங்கம்
காளி வெங்கட்,மைனா நந்தினி,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),
வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்),ஜீவா சுப்பிரமணியம்,பாரத் நெல்லையப்பன்
படக்குழுவினர் :தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ்,தயாரிப்பாளர்பிரித்திவிராஜ் ராமலிங்கம், இயக்குனர் : N அரவிந்தன்
திரைக்கதை | வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்,கேமரா & படதொகுப்பு : மதன் குணதேவ்,பாடலாசிரியர் & கூடுதல் வசனம் கார்த்திக் நேத்தா,இசை : கோவிந்த்வசந்தா
கதை கரு: பிரித்திவிராஜ் ராமலிங்கம்
இணை இயக்குனர் : பூர்ணா ஜெஸ் மைக்கேல்சவுண்ட் டிசைன் : s.அழகிய கூத்தன்,சுரேன்.Gசவுண்ட் மிக்ஸிங் : சுரேன்.G ஸ்டண்ட் இயக்குனர் : ஓம் பிரகாஷ் டைட்டில் ரிவீல் & டீஸர் & ட்ரைலர் இசை : லியோன் & டார்வின்துணை இயக்குனர் : சே மதன்,நிர்வாக தயாரிப்பாளர் : கோவை V.விஜய குமார்,நிர்வாக மேலாளர் : தனசேகர்
ஸ்டில்ஸ் : ஜீவா சுப்பிரமணியம் – மக்கா பகத் – மணிகண்டன்,பப்ளிசிட்டி டிசைன்ஸ் : சபா டிசைன்ஸ்,லைன் தயாரிப்பாளர் : ஜே பாண்டியராஜ் – தாமோதரன் வீரகுமார்
அட்மின் : கார்த்திகேயன் P.R.O : சதீஷ் (AIM) ஜூன் – 27-ல் வெளியாகும் படம் குட் டே.
கதை கரு
திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியரின் ஒரு இரவில் நடக்கும் கதை
படத்தை பார்ப்போம்
திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் தொழிலாளியா ஹீரோ (பிரித்திவிராஜ் ராமலிங்கம்) வேலை பார்க்கிறார் அதே கம்பெனியில் மேனேஜராக வேலை பார்ப்பவர் அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் மேனேஜர் தவறாக நடந்து கொள்ளுகிறார் .இதை கம்பெனி முதலாளியிடம் ஹீரோ பிரித்விராஜ் கூறுகிறார் இருந்தாலும் முதலாளி மேனேஜர் நம்புகிறார் அவர் சொல்வதை தான் கேட்கிறார் திடீர் முதலாளி கன்முன்னே ஹீரோ கன்னத்தில் ஓங்கி அடிக்கிறார் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஹீரோவுக்கு பெரிய அவமானம் , கம்பெனியில் மாத சம்பளம் கிடைத்தது , ஊரில் இருக்கும் மனைவிக்கு , அம்மாவுக்கு பணத்தை பிரித்து அனுப்புகிறார் தனக்கு தேவையான பணத்தை வைத்துக் கொள்கிறார் மனைவியிடமிருந்து போன் வாங்கிய சம்பளம் கணக்கு கேட்கிறார் இருவருக்கும் வாக்குவாதம் முடிந்தது ஹீரோ நேராக டாஸ்மாக் மது கடையில் சரக்கு வாங்கி குடித்து விட்டு , முன்னாள் கல்லூரி தோழியிடம் போனில் லவுஸ் பிறகு வீட்டு உரிமையாளரிடம் சண்டை , வீட்டு உரிமையாரின் மன்டை உடைபடுது அங்கிருந்து எஸ்கேப் . கல்லூரிதோழி வீடு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கேக் உடன் சென்று தோழி வீட்டில் ரகளை பிரச்சனை, தோழி போலீஸ் புகார் . போலீஸ் ஸ்ஷேனில் குழந்தை காணவில்லை ஒரு பிரச்சனை போய்கிட்டு இருக்கு ஹீரோவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் சட்டை கிழிய அடித்து லத்தி சார்ஜ் . ஸ்டேஷனிலிருந்த போலீஸ் Si யூனிபாஃம் மேல் சட்டை / வாக்கி டாக் ( walki Talk ) எடுத்துகிட்டு அங்கிருந்து தப்பித்து விடுகிறார் , வரும் வழியில் ஆட்டோ டிரைவர் காளிவெங்கட்டை சந்திகிறார் இருவரும் மது குடிக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் அடிதடி சண்டை இரவு 3 மணிக்கு சுடுகாட்டில் நுழைகிறார் அங்கு வேலை பார்க்கும் வேலான் ராமர்த்தியிடம் நடந்ததை கூறுகிறார் அங்கேயும் மதுகுடிக்கிறார் போலீஸ் ஹீரோவை ஒரு பக்கம் வலைவீசி தேடுகிறது ஹீரோவை போலீஸ் பிடித்ததா? காணமல் போன குழந்தையை கிடைத்ததா? ஹீரோ குடிக்கு அடிமையான காரணம் என்ன? குடியை விட்டாரா ? என்பது தான் படத்தின் மீதிகதை –
நடிகர் :ஹீரோ (பிரித்திவிராஜ் ராமலிங்கம்) நடிப்பு சிறப்பாக இருந்தது. ஒரு குடிகாரன் குடிக்கு அடிமையானவன் இந்த சமூகம் அவனை எப்படி பார்க்கிறது அவனுடை வலியை வேதனையும் வாழ்ந்து யிருக்கிறார்.
பிரித்திவிராஜ் -காலேஜ் தோழி மைனாநந்தினி நடிப்பு சிறப்பு. அவரும் அவரது கணவராக ஆடுகளம் முருகதாஸ் வரும் காட்சிகள் கொஞ்ச நேரம் சிரிக்கலாம்
விஜய் முருகன் இரக்கமில்லாத போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பு , மனித நேயம் ஜீவா நடிப்பும் அருமை. /ஆட்டோ டிரைவர் காளிவெங்கட் மது குடித்து விட்டு அமர்க்களம் , சுடுகாட்டில் எட்டியான் வேலை செய்யும் வேலான் ராமமூர்த்தி, போக்குவரத்து பஸ் ஊழியரா போஸ் வெங்கட், பகவதி பெருமாள் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மதன் குணதேவ் ஏடிட்டிங்கும் ஒளிப்திவும் படத்திற்கு பெரிய பலம். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் கார்த்திக் நேததாவின் பாடல் வரிகளும் கூடுதல் வசனமும் அருமை.
வழக்கமாக குடிகாரனை பற்றி கதை பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் இயக்குநர் N.அரவிந்தன் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக திரைக்கதையில் சுவாராஸ்யமாக ரசிக்கும்படியாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்
இப்படம் அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது










