Sunday, May 31

“ரத்னம்” திரைப்பட விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில்,நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.  நடிகர்கள் , சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன் ,YG மகேந்திரன் , விஜயகுமார் ,மற்றும்  நட்சத்திர கும்பலே நடித்துள்ளனர்  நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக ஏப்ரல் 26 – வெளியாகியுள்ள . படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம் ……

1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்க நகைகளை கொள்ளை அடிக்கும்  மிகப்பெரும் கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான அந்த காட்சி படமாக்கி விறுவிறுப்பான தொடக்கம் ..

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும் சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் நம்பிக்கையான அடியாளாக இருக்கின்றார். விஷால்,  கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார்.

மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் மெடிக்கல் சீட் கிடைக்காமல் 4வது முறையாக நீட் எழுத வேலூர் வருகிறார் பிரியா பவானி சங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது. இங்கு பெரிய சண்டை காட்சி  நடக்கிறது விஷால் அவர்களிடமிருந்து கதநாயகியை காபாற்றுகிறார் இப்படியாக ஒவ்வொரு முறையும் கொலைகார மிருகங்களிடமிருந்து காப்பாற்றுகிறார்

.பிரியாவைக் கொல்ல வெறித்தனமாக துடிக்கும்  கும்பலிடம் இருந்து தன் உயிரை பொருட்படுத்தாமல்  காப்பாற்றுகிறார்.. இது காதலாக காதலை பிரியா சொல்ல நான் உன்னை காதலிக்கவில்லை என்கிறார் விஷால்.

அப்படி என்றால் பிரியாவை  விஷால் கண் இமை போல் பாதுகாக்க  காரணம் என்ன? இருவருக்கும் உள்ள உறவுகள்  என்ன?

பிரியாவைக் கொல்ல வரும் ஆந்திர கூலி படை  கும்பல் எதற்க்காக  என்ன அவர்களின் பின்பலம்  என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை

படம் முழுக்க எட்டு சண்டை காட்சிகள் எட்டும் தனித்தனி ரகமாக ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் மிரட்டலாக  கொடுத்து   இருக்கிறார்

விஷால் ஆரம்பமாகும் காட்சியே அதிரடியாக இருக்கிறது ஒரு பள்ளி மாணவியை தொட்டவணை கையை வெட்டும்  காட்சியோடு ஆரம்ப மாகிறார்  விஷாலின் அதிரடி ஆக்ஷனைக தெறிக்க விட்யிருக்கிறார் ‘’

ஹீரோயின் பிரியா பவானி சங்கர் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் .

அதேபோல் சமுத்திரக்கனிஆளுங்கட்சி எம்எல்ஏவாக சமுத்திரக்கனி அவர் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷாலுக்கு ,படம் முழுக்க பக்கபலமாக இருந்துள்ளார் ,

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் , காம்பினேஷன் ஒருவர் ஒருவர் திட்டிக்கொண்டு கலாய்க்கும் காட்சி ரசிக்கும்படியாக  கலகலப்பு இருந்தது

கெளதம் மேனன் வரும் காட்சி   தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக அசல்ட்டாக நடித்து தூள் கிளப்பிட்டார்..

ஒளிப்பதிவு ஒளிவீச்சு அருமை புதிய கோணத்தில் சன்டை காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட விதம் அருமை.

தேவிஸ்ரீ பிரசாந்தின் இசை. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இருந்தாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்

இயக்குனரான ஹரி, நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ரத்னம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது , மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இப்படமும் இவர்களுக்கு வெற்றி கூட்டணி யாக அமையட்டும்

இந்த படத்தில்……ரத்தினமாக  (விஷால்)மல்லிகாவாக (பிரியா பவானி சங்கர், )பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக (சமுத்திரக்கனி, )
ராமச்சந்திர ராஜு, (கௌதம் வாசுதேவ் மேனன், )மூர்த்தி யாக
(யோகி பாபு)பீமா ராயுடுவாக (முரளி சர்மா, )சுப்பா ராயுடுவாக (ஹரீஷ் பேரடி) ,மற்றும்
விஜயகுமார்,மொட்டைராஜேந்திரன்,ஜெயபிரகாஷ் மோகன் ராமன், ,ஒய் ஜி மகேந்திரன் மற்றும் இதில் பணியாற்றிய அனைத்து நடிகர் /தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளார்

மொத்தத்தில் இந்த ரத்தினம் , அதிரடி சண்டை காட்சி விரும்பும் ரசிகர்களுக்கு Full meals.ஃபுல் மீல்ஸ் விருந்து!