Friday, June 19

“வள்ளுவன்” திரை விமர்சனம்

ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கும் வள்ளுவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி

இதில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:– ,இசை: அஸ்வத், ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா, எடிட்டர்: சான் லோகேஷ், மக்கள் தொடர்பு: புவன் செ​ல்வராஜ்

படத்தை பார்ப்போம்;

நாயகன் சேத்தன் சீனு சென்னையில் தனியார் நடத்தும் உணவு வினியோகம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்  உதவிகளை செய்கிறார். அதே முதியோர் இல்லத்தில் நாயகன்  சேத்தன் சீனு, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார் இதனால் இருவரும் நட்பாக பழகுகிறார்கள் .இந்த நிலையில் சென்னை நகரத்தில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரை மர்மான முறையில் கொள்ளபடுகிறது இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி மற்றும் வழக்கறிஞர் கொள்ளபடுகிறது.கொடூரமாக கொலை செய்வதோடு அவர் உடலில் சில தமிழ் எழுத்துக்கள் எழுதிவிட்டு செல்கிறார். தொடர்கொலைகள் நடப்பது தொடர்கதையாக இருக்கிறது. காவல் துறை  குற்றவாளியைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சி எடுத்து .திடீரென நாயகன் சேத்தன் சீனு குற்றவாளி என  போலீஸ் கைது செய்கிறது. ஆனால் அதன்பின்னும் கொலைகள் நடப்பது நிற்கவில்லை. அப்படியெனில் உண்மை யான குற்றவாளி யார்? இந்த கொலைக்கு  நாயகன் ஹீரோ  சம்பந்தப்படுகிறாரா..இல்லையா ?போலீஸ்பிடியில் இருந்து விடுதலை ஆனாரா ? நாயகன், நாயகி நட்பு என்ன ஆனது..? மர்ம கொலைக்கான காரணங்கள் என்ன..? பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை!

கதாநாயகன் சேத்தன் சீனு ஆக்சன் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.இவருக்கு தமிழ்திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது

இளம் நாயகி ஆஷ்னா ஜாவேரி, தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் மற்றும் இவர்களுடன் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும்  தங்கள் நடிப்பை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

எடிட்டிர்  சான் லோகேஷ். படத்திற்கு தேவையான காட்சிகளை சேர்த்துள்ளார்

எழுதி இயக்கியிருக்கும் சங்கர் சாரதி, பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள்  இத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டத்தை தாண்டிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை துணிச்சலாக   அழுத்தமாக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் பாராட்டு வாழ்த்துக்கள்

ரேட்டிங் 3.5