
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கிய “நினைவெல்லாம் நீயடா”இப்படத்தினை தயாரிப்பாளர் ராயல் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் .பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்
கதையை பார்ப்போம்: கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார், அவரை எப்படி தொடர்பு கொள்வது என அறியாமல், இவரால் முடிந்தளவு தேடுகிறார், ஆனால் மலர்விழியை பற்றி எதுவும் தெரியவில்லை.
கௌதமிற்கு, ஆனந்தி என்ற முறைப்பெண் இருக்கிறார். அவருக்கு சிறுவயதிலிருந்தே கெளதம் மேல் தீராத காதல், ஆனால் கெளதம் மலர்விழி நினைப்பாகவே இருப்பதால், ஆனந்தி தற்கொலை முயற்சி செய்யவே, வீட்டில் பெற்றோர்களின் வற்புறுத்தலால் நண்பர்கள் நச்சரிப்பாலும்,மலர்விழி இனி வரப்போவதில்லை என கூறி வேறு வழியின்றி கவுதம் முறைப்பெண்ண திருமணம் செய்து கொள்கிறார்.ஆனால் இருவரும் மனதளவில் ஒற்றுமையாக இல்லாமல் சண்டை சச்சரவு என்று இருக்கின்றனர். பழைய காதலை எண்ணி பிரஜன் குடிகாரனாக மாறுகிறார். அதை பார்த்து அவரது மனைவி மனநோயளி ஆகிறார். மலர்விழி (சினாமிகா) திருமணம் செய்து கொள்ளாமல் கவுதம் மீதுள்ள ஆசையோடே இந்தியாவிற்க்கு திரும்பி வருகிறார். வந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி கவுதமிற்கு திருமணம் நடந்துள்ளது. எப்படியாவது பிரஜனை திருமணம் செய்துக் கொள்ள மலர்விழி எண்ணுகிறார் ஆனால் இறுதியில் எதிர்பார்க்காத திருப்பம் நடக்கிறது காத்திருந்து மலர் விழியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜன், காதல், சோகம், ஏக்கம் என நடிப்பில் அசத்திருக்கிறார் பள்ளிபருவ நாயகன் பிரஜன் வேடத்தில் வரும் ரோஹித் சரியான பொருத்தமாக இருந்தது, நாயகியாக நடித்திருக்கும் சினாமிகா, பொருத்தம் இல்லாத ஜோடியாக இருக்கிறதே இவருக்காகவா பிரஜின் இத்தனை வருடங்கள் காத்திருந்தார், என்று நாம் நினைக்கும் போது, சினாமிகா ஒரு உண்மையை உடைத்து சொல்லியதால் நமக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.
பள்ளி பருவத்தில் நடித்திருக்கும் ரோஹித் மற்றும் யுவலக்ஷ்மி இருவரும் சரியான பொருத்தம் .இவர்கள் வரும் காட்சிகள் தான் காதல் படம் என்ற உணர்வை கொடுப்பதோடு, கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறது. பள்ளி தோழராக வரும் ரெடின் கிங்ஸ்லி அவ்வப்போது நம்மை சிரிக்க வைக்க முயற்ச்சிக்கிறார் மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதி ராஜன். பல காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக கதைகளம் அமைத்து உருவாக்கியுள்ளீர் உங்கள் முயற்ச்சி பாராட்டுகள்!
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. மீண்டும் அவருடைய பாடல்கள் நினைவு படுத்தியது பின்னணி இசை படத்திற்க்கு பலம்
ராஜாவின் ஒளிப்பதிவு கலர் புல்லாக ஒளிவீச்சு அமைந்துள்ளது.
படத்தொகுப்பு ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு சரியாக வெட்டி சேர்த்தல் நேர்த்தியாக இருந்தது .
இப்படத்தில் பணியாற்றி அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்
இந்த படம் . அனைவருக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ, அக்கம் பக்கத்திலோ என காதல் வந்திருக்கும். காதல் வந்தாலும் முதல் காதல் எல்லோரும் மறக்க முடியாது மனதில் என்றும் நீங்காது. என்பதை இந்த படத்தில் அழுத்தமாக இயக்குனர் அழகாக ரசிக்கும்படியாக சொல்லியுள்ளார்
நினைவெல்லாம் நீயடா …நினைவில் நிற்க்கும்.










