Thursday, April 16

எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

கிரீன் சேனல் மூவீஸ் சார்பாக வின் ஸ்டார் விஜய் இரட்டை வேடத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் “எப்போதும் ராஜா – பாகம் 1”.

சினிமா பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என முத்திரை பதித்த வின் ஸ்டார் விஜய், முதல் முறையாக நாயகனாக, அதுவும் அண்ணன்-தம்பியாக இருவரும் இரட்டைப்பிறவிகள் இரட்டை வேடத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

அண்ணன் தேசிங்கு நேர்மையான காவல் துறை அதிகாரி, தம்பி ராஜா வாலிபால் விளையாட்டில் கிங்.

அண்ணன் தேசிங்கு மதுரைக்கு மாற்றலாகிறார். நேர்மையான அதிகாரிக்கு வரும் சோதனையே அண்ணன் தேசிங்குக்கும் வருகிறது. அரசியல்வாதிகளால் குறி வைக்கப்படுகிறான். அதே போல் வாலிபால் தேசிய விளையாட்டு போட்டி விளையாட கூடாது எதிர் அணி மூலம் தம்பி வாலிபால் ராஜாவை சிலர் ஒன்றுகூடி கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர்.பெண் தாதா மூலம் கொலை மிரட்டல் வருகிறது தடுக்க முடியவில்லை பெண் தாதா மப்பும் மந்தாரா தன் அழகை காட்டி மயக்கி கட்டில் மஜா பண்ணுகிறாள்  மண்ணு தின்னுற உடம்பு பொண்ணு தின்னா என்ன? வசனம் அனைவரையும் கைதட்டல் வாங்கியது அதன்பிறகு என்ன ஆயிற்று அண்ணன் – தம்பி இருவரும் அவர்களது வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்கிறார் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் திரைக்கதை.மீதி கதை…

வின் ஸ்டார் விஜய் திரைக்கு புதுசு என்றாலும் காதல் காட்சி, சண்டைக்காட்சி, நடனம் என அனைத்திலும் குறை வைக்காத நடிப்பில் தேறுகிறார்.

நாயகிகள் டேப்லினா, பிரியா இருவரும் தன் நடிப்பின் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர் .வில்லியாக வரும் கவர்ச்சி புயல் கும்தாஜ் ரசிகர்களை தனது கவர்ச்சியால்  கிகிறங்கடிக்கிறார்.

சில காட்சிகள் மட்டும் வந்து செல்லும்  நடிகர்கள்  லயன் குமார், ஜெயவேல், கே எஸ் கே செல்வகுமார், ஜோ மல்லூரி, திரைப்பட பத்திரிகையாளர் கார்த்திக் சிறப்பாக நடித்துள்ளனர்

பாடல் இசையும் – பின்னணி இசையும் கதைக்குள் கலந்து மாயம் செய்கிறது.

இப்படம் கதை திரைகதையில் கவனம் செலுத்திருந்க்க வேண்டும் முதல் படத்திலேயே இரட்டை வேட நடிப்பிலும் இயக்கத்திலும் win Star விஜி சாதித்திருப்பது அவருடைய முயற்ச்சிக்கு பாராட்டு…