Sunday, July 26

“சைரன்” திரைப்பட விமர்சனம்.

ஸ்ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சைரன் திரைப்படம் எப்படி  விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும்  மகள் அவரை வெறுத்து அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதோடு, அவரை பார்க்க விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏங்கி தவிக்கிறார் ஜெயம் ரவி.இவருடைய கதை ஒரு புறம் நகர, காவல் துறை அதிகாரியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறார்

ஜெயம் ரவி சந்திக்கும் சில அரசியல் பெரும்புள்ளிகள் கொலை செய்யப்பட, அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கூறும் ஜெயம் ரவி, அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்து விடுகிறார்.

இருப்பினும் ஜெயம் ரவி தான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் அதிதீவிரம் காட்டுகிறார். இறுதியில் வெற்றி பெற்றது ஜெயம் ரவியா? அல்லது கீர்த்தி சுரேஷா?, ஜெயம் ரவி கொலைக் குற்றவாளியானது எப்படி?, அவரது மகள் அவரை வெறுப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை மீதி கதை வெள்ளிதிரையில் காண்க .

நடுத்தர வயது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகின்றார் ஜெயம் ரவி. அவரது நடிப்பும் வசன உச்சரிப்பின் மூலம் ஏற்றுக்கொண்ட திலகன் கதாப்பாத்திரத்தை ஆடியன்ஸ் மனதில் பதிய வைக்கின்றார். கொலைகார அப்பாவை பார்க்கமாட்டேன் என ஜெயம் ரவியின் மகளான யுவினா பர்வதியின் நடிப்பு ஓ.கே. ஆனால் மகளை பிரிந்த அப்பாவுக்குள் இருக்கும் ஏக்கத்தை ஜெயம் ரவி சிறப்பாகவே வெளிக்காட்டியுள்ளார்.

யோகிபாபு, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.முன்கதையில் ஜெயம் ரவியின் மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் (மாற்றுதிறனாளியாக) சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறார் குறை சொல்ல முடியாத நடிப்பைத்தந்திருக்கிறார். சாதிவெறி பிடித்த  காவல்துறை உயரதிகாரியாக சமுத்திரக்கனி மற்றும் இதில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்

படத்தின் முதல் பாதி வேகமாகவும், பரபரப்புடனும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் எமோஷன்ஸ் ஆளுமை செய்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆணவ படுகொலை, சிறைக் கைதிகளின் ஏக்கம் எனப் பல இடங்களைத் தொட்டுள்ளார் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கலாம்! அவருடைய முயற்ச்சி பாராட்டுகள்!

ஒளிப்பதிவு : செல்வகுமார் காஞ்சிபுர  நகர வீதிகளை பகல் /இரவு காட்சிகள் ஒளிவீச்சு சரியாக கொடுத்து அழகா ஒளிபதிவு செய்துள்ளார்

ரூபனின் படத்தொகுப்பு நேர்த்தியாக தன் பணியை செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில்பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சாம் சி.எஸ் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சல்.  பின்னணி இசையை விடப் பாடல்களே சிறப்பாக உள்ளன.

மகள் மீது அன்பு, மனைவி மீது காதல், சண்டை எனப் பல இடங்களில் நின்று ஸ்கோர் செய்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் நடிப்பில் சைரன் ஒரு பெயர்ச் சொல்லும் படமாக இருக்கும். போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்திருக்கலாம்

அப்பா-மகள் செண்டிமெண்ட் , ஆம்புலன்ஸ் ஒட்டுனர் கதைகளம் டபுள் ஒகே!

சாதி வெறி சொல்லும் கதை களம் இல்லாமல் இருந்து இருந்தால் “சைரன்”படம் வேற லெவல்  !இது என்னுடை விமர்சனம் :

RATING :3.5/5