Sunday, May 31

”ஹாட் ஸ்பாட் 2 மச்’’ திரைப்பட விமர்சனம்.

தயாரிப்பு : கேஜேபி டாக்கீஸ் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்
பிரியா பவானி சங்கர்,
பிரிகிடா சாகா, அஷ்வின் குமார்,
ரக்ஷன்,  எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா
விக்னேஷ் கார்த்திக்,கே.ஜே. பாலமணிமார்பன், பவானி ஸ்ரீ,
சஞ்சனா திவாரி -ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஒளிப்பதிவு : ஜெகதீஷ்ரவி, ஜோசப் பால், இசை : சதீஷ்ரகுநாதன்
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
படம் ஹாட் ஸ்பாட் 2.

கதை கரு இந்த படத்தில் நாலு கதைகள் நாலும் வெவ்வேறு களத்தில் பயணிக்கிறது …

படத்தை பார்ப்போம்:

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநர் நான்கு வெவ்வேறு கதைகள் மூலம் ரசிகர்களை ஆதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ’. முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர்
பிரியா பவானிசங்கர்
கதை சொல்ல வருகிறார்.ஒவ்வொரு கதையும் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கதையில் விரிகிறது.

முதல் கதை நடிகனுக்காக சண்டை போட்டுக்கொள்ளும் ரக்ஷன் ஆதித்யா பாஸ்கர் இருவருக்கும்  எம் எஸ் பாஸ்கர் கொடுத்த மரணபயம் .. கதை.

இரண்டாலது கதை
தம்பி ராமைய்யா அவரது மகள் சஞ்சனா திவாரி கதை. தன்னுடை செல்ல மகள் வெளிநாடு கலாச்சாரம் வளர்ந்தவள் ஆணவ பேச்சு நாகரிகம் என்று ஆடை குறைப்பு விஷயத்தை சரியான  பதிலடி  கொடுத்துள்ளார்

மூன்றாவது கதை திருமண முறையில் உள்ள சிக்கல்,2050-ல் வசிக்கும் பவானி ஸ்ரீக்கும் இப்போதை காலகட்டத்தில் வசிக்கும் அஷ்வினுக்கும் இடையே எப்படி தொடர்பு ஏற்படுகிறது இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா?

.பிரியா பவானி கதை
படத்தின் சுவாராஸ்யம் கருதி சொல்லவில்லை.
பிரியா பவானி சங்கர், பிரிகிடா சாகா கொடுத்த கதாபாத்திரம் என்ன?.. பல திருப்பங்களுடன்  படத்தின் மீதிகதை

தயாரிப்பாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன் நடிப்பும் அருமை.ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
யு.முத்தயனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இந்த மூன்று கதைகளில் முதல் இரண்டு கதை புதுமையாகவும், காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. ஆடை சுதந்திரம் என்பது இடம், பொருளுடன் தொடர்புடையது என தம்பி ராமையா சொல்லும் இடம் சபாஷ் சொல்ல வைக்கிறது. பிரியா பவானி சங்கர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது  டைரக்டர் முதல் இரண்டு கதைக்கு தந்த முக்கியத்துவம் மூன்றாவது கதைக்கு தரவில்லை. அஸ்வின் பவானி காதல் 2024, 2026 என்று மாறி, மாறி சென்று குழப்பத்தை தருகிறது.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை போதுமான அளவுக்கு செய்துள்ளனர்.

கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

சொல்ல வந்த கதைகளை சிறப்பாக சொல்லியிருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்து உள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பாராட்டுக்கள்..

மொத்தத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் பார்த்து ரசிக்கலாம்.