
தேஜாவு படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தருணம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகாஸ் மற்றும் ஈடன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர் : தர்புகா சிவா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.
படத்தை பார்ப்போம்: சி.ஆர். பி.எஃப். அதிகாரியான ஹீரோ அர்ஜுன் (கிஷன் தாஸ்) தீவரவாதி கும்பலை பிடிக்க ஒரு டீம் உடன் ஸ்பாட் Spot-க்கு போகிறார் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தன்னுடன் வந்த போலீஸ்காரர் இவர் சுட்டு விடுகிறார் அதே இடத்தில் இறந்து விடுகிறார் இதனால் பணியிலிருந்து தற்காலிக வேலை நிறுத்தம் (சஸ்பென்ட்) செய்யப்படுகிறார் .. கதாநாயகி ஸ்ம்ருதி வெங்கட் தன் ஆண் நண்பனுடன் காரில் வேகமாக பயணம் செய்யும் போது விபத்துகுள் சிக்கி உயர் பிழைத்து வந்தார் . ஹீரோ கிருஷ்ணதாஸ் (அர்ஜுன்), ஸ்ம்ருதி மீரா, ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள் அதன் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள் இருவீட்டு சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடக்கிறது .. திடீர் மீரா (ஸ்ம்ருதி)யின் வீட்டில் ஆண் தோழன் ரோஹித் (ராஜ் ஐயப்பா) இறந்து கிடக்கிறான் அந்த நேரத்தில் ஹீரோ தன் காதாலியை பார்க்க வீட்டுக்கு வருகிறார் இறந்த உடலை பார்க்கிறார் அதிர்ச்சியாகிறார் ஒரு பக்கம் வருங்கால மனைவி இன்னொரு பக்கம் தான் நேர்மையான போலீஸ் அதிகாரி (தற்காலிக ஓய்வு) மீராவை காப்பாத்தனும் தன் வேலையில் மீண்டும் சேரனும் / இவர்களுக்கு திருமணம் நடந்ததா ? போலீஸ் வேலையில் மீண்டும் சேர்ந்தாரா? ரோஹித் எப்படி இறந்தார் யார் காரணம்? படத்தின் மீதி கதை…
,அர்ஜுன் (கிஷன் தாஸ்) போலீஸ் அதிகாரியாக வரும் காட்சி பராயில்லை வில்லத்தனம் கதாபாத்திரமாகவும் காதல் ஹீரோ சாக்லேட் பாய்யாக மாறியிருக்கிறார் அசத்தலான நடிப்பு சிறப்பாக செய்துள்ளார்.
(மீரா )ஸ்மிருதி வெங்கட்டின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சுவராஸ்யமாக இருக்கிறது. கதை நகர நகர அந்த கதாபாத்திரத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு கூடுகிறது . ரோஹித் வில்லன் கதாபாத்திரம் சரியாக சூப்பராக செய்துள்ளார்.
பால சரவணனால் வரும் காட்சி பார்பவர்களை சிரிக்க ரசிக்கவைக்கிறார் …. இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவும் ராஜா பட்டாச்சார்ஜி , படம் ஒட்டத்திற்க்கு ஏற்றார் போல் ஒளி காட்சியமைப்பு சிறப்பாக இருந்தது
பின்னனி இசை தர்புகா சிவா படத்திற்க்கு பக்க பலமாக இருந்தது .
எடிட்டர் : அருள் இளங்கோ சித்தார்த் படத்திற்க்கு தேவையான காட்சிகள் இணைத்து படத்தின் விறு விறு வேகத்தையும் கூட்டியுள்ளது
இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட் கலைஞர் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
சொல்ல வந்த கதையை தனது முதல் படத்தில் உருவாக்கிய கிரைம் த்ரில்லரர் இந்த படத்தில் முழுக்க சஸ்பென்ஸ் ,த்ரில்லர் காதல் /சண்டை / எமோஷன் … எதிர்பார்ப்புடன் வித்தியாசமான கதை களம். , திரைகதையில் சிறப்பாக கொடுத்து உள்ளார். தருணம் குடும்பத்துடன் சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம்.










