“தருணம்” திரைப்பட விமர்சனம்.
தேஜாவு படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தருணம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகாஸ் மற்றும் ஈடன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பன், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர் : தர்புகா சிவா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.
படத்தை பார்ப்போம்: சி.ஆர். பி.எஃப். அதிகாரியான ஹீரோ அர்ஜுன் (கிஷன் தாஸ்) தீவரவாதி கும்பலை பிடிக்க ஒரு டீம் உடன் ஸ்பாட் Spot-க்கு போகிறார் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தன்னுடன் வந்த போலீஸ்காரர் இவர் சுட்டு விடுகிறார் அதே இடத்தில் இறந்து விடுகிறார் இதனால் பணியிலிருந்து தற்காலிக வேலை நிறுத்தம் (சஸ்பென்ட்) செய்யப்படுகிறார் .. கதாநாயகி ஸ்...
