Sunday, July 26

” போலீஸ் பேமிலி ” திரைவிமர்சனம்

தயாரிப்பு : ஆன் தி டேபிள் புரடக் ஷன்ஸ்; இயக்கம் : பாலு.எம்.
நடிப்பு : காதல் சுகுமார், ராஜாமலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா, சுரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ஜெயகுமார் தங்கவேல்
இசை : ஜெயா கே தாஸ்.

படத்தை பார்ப்போம்:

பட ஓப்பனிங்கில் ஒரு இரவு நேர வாகன சோதனையின்போது சந்தேக கேஸில் ஒரு பையனை செக் பண்ணும்போது அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கணடுபிடித்து அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தது அவனை  ஸ்டேஷன் அழைத்து சென்று நாலைந்து போலீசார் அடித்து உதைக்கிறார்கள்.அடி தாங்காமல் மயக்கத்தில் இருக்க அவனை கொணடு சென்று ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறார்கள்.  மதுரையில் இருக்கும் பிரபல தாதா பருத்திவீரன் சரவணன் மகன்தான் அந்த இளைஞர் என்பதை  போலீசார், மயக்கநிலையில் இருக்கும் அந்த இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறம் போட்டுவிட்டு வருகிறார்கள் பொழுது விடிந்த போட்டுவிட்டு வந்த அவனை மர்ம நபர் யாரோ  அவனை சாகடித்து விடுகிறார்கள் .இது போலீஸ்க்கு தெரிந்து ஷாக் ஆக இறந்த பையன் பிரபல ரவுடி சரவணன் மகன் என தெரிய வர மேலும் ஷாக் ஆகிறார்கள். சரவணனுக்கு தன் மகனை கொன்றவர்கள் போலீஸ் என நினைத்து ஒவ்வொருவரின் குடும்பத்தை பழிவாங்கி வர உண்மையான கொலைகாரனை போலிஸ் தேட முடிவு என்ன என்பதை பல திருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை

பருத்திவீரன் சரவணன் வில்லனாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். காதல் சுகுமார் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து படம் முழுக்க வந்து நம்மை கவர்கிறார்.
ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக சுரேகா மற்றும் நிஷா துபே மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்தரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஜெயக்குமாரின் ஒளிப்பதிவுபடத்திற்கு பெரிய பலம்.

ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இயக்குநர் பாலு ஏல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.