Thursday, September 10

“கொலைச்சேவல்” திரை விமர்சனம்.

ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா – கவுசல்யா பாலா தயாரித்திருக்கும் கொலைச்சேவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர். துதிவாணன்
நடிகர்கள்  கலையரசன் – காளி, தீபா பாலு – அனுசுயா, பாலசரவணன் – குமார், கஜராஜ் – தாஸ், விஜய் சத்யா – மூர்த்தி, ஆதவ் சந்திரா – அன்பு,  மற்றும் பலர் படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: பி.ஜி.முத்தையா, இசை: சாந்தன், எடிட்டர்: அஜய் மனோஜ், கலை இயக்குனர்: சரவண அபிராமன், பிஆர்ஒ: நிகில் முருகன்

படத்தை பார்ப்போம்

ஒரு குக்கிராமத்தில் வாழும் காளி (கலையரசன்), பக்கத்து ஊரைச் சேர்ந்த அனுசூயா (தீபா பாலு) என்பவரைக் காதலிக்கிறார் இவர்களின் காதலுக்கு  அனுசூயா பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் வெளியூரில் குடியேறி அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இரு ஆண்டுகள் கழித்து, அனுசூயா கர்ப்பமடைகிறார்., தங்கள் குடும்ப வழக்கப்படி குலதெய்வமான ‘நிறை சூலி’ (கர்ப்பிணி தெய்வம்) கோவில் ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கலையரசன் குடும்பத்தார் மற்றும் அவருடைய நண்பர்கள் பால சரவணன் அனைவரும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சந்தோஷமாக சாமி கும்பிட்டு விட்டு குடுபத்தார் அனைவரும் டிராக்டர் வண்டியில் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள் கடைசியாக  கலையரசன் –தன் கர்ப்பிணி மனைவி அனுசுயாவுடன்  , மெதுவாக கிளம்புகிறார்கள் ஏற்கனவே அந்த காட்டு பகுதியில்  ஒரு கும்பல் “நிறை சூலி’” கோயில் அருகில் மது குடித்து விட்டு சீட்டாட்டம் ஆடுகிறார்கள் இவர்கள் அனைவரும் திடீரென்று கலையரசன் – கர்ப்பிணி மனைவி அனுசுயாவை கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார்கள்  திடீரென்று அந்த இடத்திற்கு அனுசுயாவின் அப்பாவும்,  தம்பியும் வருகிறார்கள் இவர்களும் அனுசுயா  மீது  கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள்  இந்த கொலைவெறி தாக்குதல் ஏன் ? தாக்குதலிருந்து -கலையரசன் – அவருடைய  கர்ப்பிணி மனைவி அனுசுயா தப்பித்தாரா ?  இல்லையா .? தடுக்க வந்த பாலசரவணன்  மீது தாக்குதல் ?இந்த தாக்குதல் என்ன காரணம்..? பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை.

எதார்த்தமான நடிப்பில்  கலையரசன், இந்தப் படத்திலும் ஒரு அன்பான கணவன், இக்கட்டான சூழலில் தனது மனைவியைக் காக்கப் போராடும் ஒரு இளைஞனாகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அனுசூயாவாக கதையின் நாயகியாக வரும் தீபா பாலு, பயம், பதற்றம் மற்றும்  இறுதிக்காட்சிகளில் இவரின் பரிதாபமான அழுத்தமான நடிப்பு பார்வையாளர்களின் அனைவரின் கவனத்தை ஈர்த்தது

கதாநாயகனின் குடும்ப நண்பனாக  பாலசரவணன் சில காட்சிகளில் காமெடி கலாட்ட ரசிக்கும்படியாக இருக்கும் மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கிரமத்து மற்றும் அடர்ந்த பசுமை நிறைந்த காட்டு பகுதி அழகையும் ஒளிப்பதிவாளர்: பி.ஜி.முத்தையா, சிறப்பாக பதிவு செய்துள்ளார்

பின்னனி இசை: சாந்தன் படத்திற்க்கு பெரிய பலம் :படத்தின் நீளத்தை எடிட்டர்: அஜய் மனோஜ்,கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்குனர் வி.ஆர். துதிவாணன் தேர்வு செய்த படத்தின் கதை வழக்கமானது படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் கடைசி 20 நிமிடம தான் பார்வையாளர் கவனத்தை பெறுகிறது.. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சி உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு ..படம்பார்க்க பொறுமை தேவை ..