
ஆர்.பி. டாக்கீஸ் ரமேஷ்பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஜெகன் பஷீகரன் தயாரிப்பில், மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் கெணத்த காணோம்.
இதில் யோகி பாபு- மணிவாசகம் , லவ்லின் சந்திரசேகர் – யாழினி, ரேச்சல் ரபேக்கா – சுந்தரவல்லி, ராமகிருஷ்ணன் – ராகவன், ஜார்ஜ் மரியன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: தியாகராஜன், இசை : நிவாஸ் கே பிரசன்னா, படத்தொகுப்பு: ராமர், , வெளியீடு -ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், பிஆர்ஒ -ஸ்ரீவெங்கடேஷ்.
படத்தை பார்ப்போம்:
கதாநாயகன் யோகிபாபு வாழும்
கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இவர் தான் அந்த ஊரின் கோயில் பூசாரி தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஊர் ஒன்றுகூடி யோகிபாபுக்கு சொந்தமான இடத்தில் நீர் ஓட்டம் உள்ளது முதலில் இடத்தை தரமறுத்த யோகிபாபு ஊர் ந.ன்மைக்காக இடத்தை தருகிறார் அந்த இடத்தில் கிணறு வெட்ட
இந்ந சூழ்நிலையில் யோகிபாபு தந்தை தியாகி கிணறு வெட்டியதால் கோவில் இடிந்து வீடும் இடிந்து அவர் இறக்கிறார். அவரை முன்வழியாகத்தான் கொண்டு செல்வேன் என்று அடம்பிடிக்கிறார் அது நடந்ததா?அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா எதோ ஒன்னு கிடைக்குது அது என்ன..? படத்தின் பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு காதலியாக லவ்லின் சந்திரசேகர் இயல்பாக நடித்துள்ளார். ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் என இதில் நடித்திருக்கும் ஊர் மக்கள் அனைவரும் அவரவர கதாபாத்திரம் ஊணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்ன இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஒளிப்பதிவும் கிராமத்தை அப்படியே பதிவு செய்து உள்ளார் அருமை.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையை கதையை கருவாக கொண்டு எல்லோரும் ரசிக்கும்படி உணர்வுப்பூர்வமாக காமெடியில் கலகலப்பாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
இப்படம் குடும்பத்தோடு பார்க்கலாம்










