Monday, August 10

“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.

ஏ.பி.அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக். இயக்கத்தில்
அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: எம்.எஸ். பிரபு, இசை: கார்த்திக் ராஜா, அசல் பின்னணி இசை: அருண் ராஜ், எடிட்டர்: இம்ரான்

படத்தை பார்ப்போம்:

அரசுப் பள்ளியில் படிக்கும் வேணி (அபர்ணதி), தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை பற்றி பேசாமல் இருப்பது குறித்து தன் வளர்ப்பு தந்தை காளிவெங்கட்டிடம் சொல்கிறாள். அதற்கு காளி வெங்கட் நன்றாக படித்தால் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று சொல்ல நன்றாக படித்து  ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி, ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது

இப்படி இருக்கையில்,உள்துறை அமைச்சர் ஜான் விஜய் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது.

முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்

சில தடைகள் வருகிறது. ஆனால் தடைகளை முறியடிக்கும் அபர்ணதி, ஒருகட்டத்தில் இளவரசுவே தன் பேச்சை கேட்கும் நிலையை உருவாக்குகிறார்.தன்னை ஒடுக்க நினைத்த அரசியல்வாதிகளை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி பணிய வைத்தார்? என்பதே பல திருபங்களுடன்  படத்தின் மீதிக்கதை.

கலெக்டராக கதையின் நாயகியாக வேணி கதாபாத்திரத்தில் அபர்ணதி சிறப்பாக நடித்துள்ளார். முதல்வராக இளவரசு நடிப்பும் அருமை. ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு, பிரியா நாயர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்நிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு இரவு, பகல் காட்சிகள் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்  படத்திற்கு பெரிய பலம்.
கார்த்திக் ராஜா, இசை ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் ராகுல் அசோக் எடுத்துக்கொண்ட இன்றைய அரசியல்  கதையை விறுவிறுப்பாக அடுத்தது என்ன  ? என்ற எதிர்பார்ப்புடன் தைரியமாக நேர்த்தியாக  துணிச்சலாக சொல்லியிருக்கிறார் உங்கள் முயற்ச்சிக்கி பாராட்டு

மொத்தத்தில் படம் பார்க்கலாம் ரசிக்கும்படியாக உள்ளது