Wednesday, September 9

“ரெட் லேபிள்” திரை விமர்சனம்.

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ரெட் லேபிள் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத்

இதில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுதியவர்: பொன் பார்த்திபன், இசையமைப்பாளர்: கைலாஸ் மேனன் , பாடியவர்கள்: சின்மயி ஸ்ரீPபாதா, வேல்முருகன், கவிதா கோபி , ஒளிப்பதிவாளர்: சதீஷ் மையப்பன் , எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , ,மக்கள் தொடர்பு : ஸ்ரீPதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு.

கதைகரு: கல்லூரியில் தொடங்கி கல்லூரியில் முடிகிறது ! கல்லூரியில் அடிதடி கலவரம்  மோதல் M.L.A – வின் மச்சான் கொலை   நடந்தது என்ன ..?.

படத்தை பார்ப்போம் :

கோயம்புத்தூரில் நடக்கும் கதைகளம் கல்லூரி தேர்தல்  தலைவராக போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் இவர் அரசியல்வாதி R.V உதயகுமார்  M.L.A  பணம் , அதிகார, செல்வாக்கு பலம் கொண்டவர் இவருடை மகன்   பாண்டியன் மற்றும்  மகள்  பவித்ரா / இவர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் நயகன் :கதிர். (லெனின்)இப்போது இந்த கல்லூரியில் தேர்தல் நடக்கிறது இந்த தேர்தலில் போட்டியிடுபவர்  பாண்டியன் இவர் அதிகாரம் செல்வாக்கு மிக்க  MLA – வின் மகன். இவரை எதிர்த்து போட்டியிடும் மாணவன் ரோகித் நடுத்தர குடும்பம் இவனுக்கு  கல்லூரில் மாணவர்களிடம் நல்ல  பெயர் மாணவர் /மாணவி ஆதரவு  இருந்தாலும் ஆள் பலம் /அதிகாரம், பணம் பலம் எதுவும் இல்லை  ரோகித் க்கு  முன்னாள் மாணவன் நாயகன் கதிர் ஆதரவு கொடுக்கிறார் மற்றும் M.L.A மகள்  பவித்ரா ( பாண்டியன் சகோதரி ) நாயகனின் காதலி ஆவார்  கல்லூரி தேர்தல் சூடு பிடிக்கிறது   வேட்பாளர்  பாண்டியன் மணவர்களும் லஞ்சமாக  பணம், மது   கொடுக்கிறார் , மாணவிகளுக்கு அவர்களுடை  Bank AlC : GPay பணம் போடுகிறார  அதே நேரத்தில் கல்லூரில் நடக்கும் விழா நிகழ்ச்சில் கலந்து கொண்ட பாண்டியனின் மாமா கொலை செய்யப்படுகிறார் இந்த கொலையை செய்தது யார் ? கொலைக்கான காரணம் என்ன? முன்னாள் மாணவன் கதிர் மீது முன்விரோத காரணமாக போலீஸ்  அதிகாரி, பழிவாங்க துடிக்கிறார் கதிர்க்கும் போலீஸ் அதிகாரிக்கும்  என்ன பகை ? அந்த கொலை பழியிலிருந்து  தப்பிததாரா…? கல்லூரி தேர்தலில் யார்  ஜெயித்தார்கள்? கதிர் தன் காதலியை கரம் பிடித்தாரா ?  எப்படி இவர்கள் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் பல திருப்பங்களுடன்  மீதிக் கதை…

நாயகன் கதிர் (லெனின் ) முதல் படம் ஆக்ஷன் , அடிதடி , காதல் , அம்மா, தங்கை  பாசம் ,சென்டிமென்ட் அறிமுக நடிகரா முதல் படத்திலே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் ,நாயகி அஸ்மின், கெடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் ஆர்.வி.உதயகுமார் M.L.A வாக  வில்லனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு உதவியாளராக அனுமோகன் அசத்தி யுள்ளார், மற்றும் அரசியல்வாதியாக
முனீஷ்காந்த்,  போலீஸ் அதிகாரியாக (படத்தின் கதையாசிரியர் ) பொன் பார்த்திபன், எம். எல். ஏ மகன், இவரை எதிர்த்து போட்டியிடும் மாணவர், பேராசகரியர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரோக்கிய மான விஷியம் தொடங்கியிருக்கிறது கதையாசிரியருக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள் அந்த வரிசையில் பொன்பார்த்தீபனின் எழுதிய கதையின்  பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை விறுவிறுப்பாக அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் வேகமாக எல்லோரும் ரசிக்கும்படி  சொல்லியுள்ளார்  இயக்குநர் கே ஆர் வினோத். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

அனைவரும் பார்க்கலாம்