
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரனும், ஒண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்னர், தனுஷும் நித்யா மேனனும் இணைந்துள்ளனர் இதில் சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கதை கரு
சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் “இட்லி கடை ” திரைப்படம் ..
படத்தை பார்ப்போம்:
தேனியின் கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் ராஜ்கிரண்.அவரது மகனான தனுஷ் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஆசை கேட்டரிங் படித்து முடித்ததும் சென்னைக்கு வருகிறார் . அங்கிருந்து அப்படியே கிளம்பி பாங்காக்கில் மிகப்பெரிய தொழிலதிபரான சத்யராஜிடம் வேலை செய்கிறார் நம்பிக்கை நாணயம் வேலையின் திறமை நாயகன் தனுஷால் கம்பெனியில் லாபம் கூடுகிறது அதனால் சத்யராஜின் தன் மகள் ஷாலினி பாண்டே வை தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்
விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கெடையில் தனது அப்பா ராஜ்கிரண் இறந்ததும் சொந்த ஊருக்கு வருகிறார் இறுதி சடங்கை முடிகிறது அடுத்தது உடனே அம்மாவும் இறந்து விட்டனர் ஒரு சில நாட்களில் இரண்டு இறப்பு பெரிய பாதிப்பு தனுஷ் தனது திருமணத்தை நிறுத்திவிடுகிறார். தங்கையை ஏமாற்றியதற்காக அவரை பழிவாங்க தனுஷ்யை தேடி வருகிறார் அருண் விஜய். இன்னொரு பக்கம் அந்த இட்லி கடையை வாங்க சமுத்திரகனி ஊருக்குல் பந்தவாக வலம் வருகிறார் இன்னொரு பக்கம். நித்யமேனன் கல்யாணம் கட்டிக்க ஆசைபடுகிறார் தனுஷ் தனது அப்பாவின் இட்லி கடையை விலைபேசி முடிக்கப்படுகிறது கடையை அவரே எடுத்து நடத்த முடிவு செய்கிறார்.?காவல் துறை ஆய்வாளர் R. பார்த்திபன் எதிர் அணியில் பணத்தை வாங்கி கொண்டு பட்டா இல்லாத இடத்தில் இட்லிகடை இருப்பதாக கூறுகிறார் ? இட்லி கடையை காப்பாற்றினாரா.? அருண் விஜய் அவரை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இளவரசு கதாபாத்திரம் நல்ல ஆறுதல் . வில்லனாக வரும் அருண் விஜய் – தனுஷ் இடையேயான மோதல் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும் இவர்களுடன் சத்யராஜ், பார்த்திபன் காவல் துறை ஆய்வாலர் காமெடியாக இருந்தாலும் கடைசியாக சிறப்பான பஞ்சு வசனம் பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தது, சமுத்திரக்கனி கிராமத்து மைனர் வித்தியாசமான கதாபாத்திரம் நித்யா மேனன் வழக்கமான நடிப்பு தான் ஆடுகளம் நரேன் ஷாலினி பாண்டே மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது கிரண் கெளசிக்கின் ஒளிப்பதிவு நம்மை அப்படியே அந்த காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. குறிப்பாக ராஜ்கிரணின் ஃபிளாஷ்பாக் காட்சிகள் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக பிரசன்னா தேவையான காட்சி மட்டு இணைத்து பட ஒட்டத்திற்க்கு இணையாக பணியாற்றி உள்ளார் .ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தரம்.
ஒரு சின்ன இட்லி கடையை வைத்து தனுஷ் நல்ல படம் எடுக்க நினைத்ததில் பாராட்டப்பட வேண்டும் கதைகள் எதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதும் மிக அவசியம். நேர்த்தியான திரைக்கதையும் கதாபாத்திரம் உருவாகியிருக்கிறது படத்தில் எல்லாமே செண்டிமெண்ட் அடுத்தடுத்து.யூகிக்கக் கூடிய அடுத்த காட்சிகள் / க்ளைமேக்ஸ் என படத்தில் எல்லாமே செண்டிமெண்ட் கிராமத்து வாழ்க்கையை பற்றி படம் பேசுகிறது. சண்டை ரத்தம் தலையை வெட்டி சாய்க்கிறது ,போதை ஆபாசம் காட்சி ரெட்டை அர்த்தம் வசனம் இல்லை நம்மண்ணின் கலாச்சாரத்தோடு ஒன்றிய படமாக இது உள்ளது.தனுஷ் இயக்குனராகவும், நடிகராகவும் ஜெயித்திருக்கிறார்.
கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் தைரியமாக பார்க்க வேண்டிய படம்
