Wednesday, June 24

“நூறுசாமி” திரை விமர்சனம்.

பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பதோடு விஜய் ஆண்டனியே தயாரித்தும் உள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். இவர்களோடு லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவ அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தைப் பார்போம்

கள்ளக்குறிச்சியில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்து  இரு குழந்தைகளையும் கடும் போராட்டத்திற்கு மத்தியில் வளர்க்கிறார். உறவினர்கள் யாரும் உதவிக்கு  வரவில்லை  பொருளாதார பிரச்னைகளை சமாளித்து தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து பின்னர் வேலைக்கு செல்கிறார்கள் ,இந்த நிலையில் வளர்ந்து வந்த  பிள்ளைகளிடம் தன் மறுமணத்தை பற்றி விருப்பம் தெரிவிக்க மூத்த மகன் பாஸ்கர் ஆத்திரமடைகிறார் சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் விருப்பத்தை புரிந்து கொண்ட மகன்கள் அவருக்கு மறுமணம் செய்ய விரும்புகின்றனர் அம்மாவிற்க்காக மகன்கள் திருமண புரோக்கர் மூலம் மாப்பிள்ளை தேடுகிறார்கள் இதே போல் பக்கத்து ஊரில் மனைவியை இழந்த விவசாய குடும்பம் விஜய் ஆண்டானியை திருமண புரோக்கர் மூலம் பாஸ்கர் சந்திக்கிறார் தன் அம்மாவின் திருமண விழியத்தை சொல்ல விஜய் ஆண்டானி  மறுமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்க மறுநாள் மறுமணபெண்  ஸ்வாசிகா  வீட்டிற்க்கு விஜய் ஆண்டானி வருகிறார் மறுமண தம்பதிகள் இவரும் சந்திக்கிறார்கள் சம்மதம் தெரிவிக்கிறார்கள்  திருமண ஏற்பாடு நடக்கிறது  இதைதெரிந்து கொண்ட அண்ணன் கருணாஸ் குடும்பத்துடன் தங்கை செல்வி வீட்டுக்கு வந்து தங்கையை  கொலை செய்ய முயற்சி நடக்கிறது..இந்த சூழ்நிலையில் செல்வி  அவருக்கு மறுமணம் நடந்ததா? இல்லையா ? கருணாஸ்  தங்கை ஸ்வாசிகா கொலை செய்ய காரணம் என்ன? சமூகத்தின் எதிர்ப்பை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..

மனைவியை இழந்த விஜய் ஆண்டனி விவசாய குடும்பம்  இடைவேளை பின் 40 நிமிடம் வந்து போகிறார் சிறப்பாள நடிப்பை கொடுத்துள்ளார்

படத்தின்  நாயகி செல்வி கதாபாத்திரத்தில் வரும் ஸ்வாசிகா தான்.மகன்களிடம் கண்டிப்பு காட்டும் அதேநேரத்தில், அவர்களை அரவணைத்து, வாழும்தாய்யாகவும்  திரையில் ஜொலிக்கிறார் .ஆண் துணை இல்லாமல் வாழும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  ஊர் மக்களின் பேச்சுக்குப் பயந்து வாழ்வது, மின்விசிறியிடம் தன் குறைகளைப் சொல்வதும் அதில் அவருக்கு கிடைக்கும் சந்தோஷம்  எதார்த்தமான நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.

ஸ்வாசிகா மகனாக அஜய் திஷன், மற்றும்  வில்லானக ஊரில் பெண் சபலகாரர் பெண்களை அடிமையாகவும் போதை பொருளாகவும்  இளம்விதவை ஸ்வாசிகா  அடைய பல தொல்லைகள் அவதூர்களை பரப்புவது வில்லத்தனமான கதாபாத்திரம் பாலாஜி சக்திவேல் மற்றும் ல்வாசிகாவுக் அண்ணனாக கருணாஸ் பாசகாரனாக _ கொலைகாரனாக மாறும் கதாபாத்திரம் சிறப்பு மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

இசை & ஒளிப்பதிவு
பாலாஜி ஸ்ரீராமின் இசையும், தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவும் கதைக்கு பெரிய பலம். எடிட்டர் படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்

 

இயக்கம்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மிக அழுத்தமான கதை களத்தை எடுத்து அதனை எவ்வளவு தெளிவாக சொல்ல முடியுமோ, அப்படி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி., கணவனை இழந்த பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை  அவர்களது ஆசைகள் வலிகளை நேர்மையாக துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டு

இப்படம் வயதுவந்தோர் அனைவரும் பார்க்கலாம்.