
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகெங்கிலும் திரையரங்குகளில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர் அனிருத் இசையமைத்துள்ளார்ர , ஒளிப்பதிவு இயக்குனர் : எஸ்.ஆர்.கதிர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : கே.கதிர், சண்டைப் பயிற்சி : அன்பறிவ், படத்தொகுப்பு : பிலோமின் ராஜ், திரைக்கதை : பா. கிருத்திகா, கலை இயக்குனர் : சக்தீ வெங்கட்ராஜ் ,நடன இயக்குனர் : தினேஷ், ஆடை வடிவமைப்பு : பெருமாள் செல்வம், அனு வர்தன், தினேஷ் மனோகரன், இணை இயக்குனர்கள் : மகேந்திரன், செந்தில்குமார் கேசவன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், சதீஷ் (ஏய்ம்)
. , வேட்டையன் பட விமர்சனத்தை பார்ப்போம்
வேட்டையனின் இதில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் ரஜினிகாந்த். கல்வியில் எவ்வளவு தில்லுமுள்ளு நடக்கிறது,மோசடி நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. ராணா டகுபதி அரசியல்வாதி, அரசு அதிகாரி ஆதரவுடன் கல்வியில் மோசடி மன்னனாக இருக்கிறார். இதற்கிடையில் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் கஞ்சா மூட்டை பதுக்கி வைத்திருபது பெண் ஆசிரியருக்கு தெரிய வருகிறது இவர் தன் மேல் அதிகாரியிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை திடீர் பெண், ஆசிரியர் கொலை செய்யப்படுகிறது இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க வரும் ரஜினி, கொலை குற்றவாளி அவரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுகிறார் . ஆனால், மனித உரிமை ஆணைய நீதிபதியாக அமிதாப்பச்சன் இதை எதிர்க்கிறது ஏற்க மறுக்கிறார். இதனால், அமிதாபச்சனுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் உருவாகிறது .பள்ளி பெண் ஆசிரியர் கொலைக்கு பின்னனி காரணம் யார்? ரஜினி, என்கவுண்டர் செய்வது தவறு சொல்வது சரியா ? ராணா டகுபதி கல்வி மோசடி மன்னன் செய்வது சரியா ? படத்தின் மீதிகதை …
இயக்குநர் த.செ.ஞானவேல் வேட்டையன் படத்தின் வசனங்கள் , அரசாங்கத்தையும், போலீசையும் வசனத்தால் திரும்பி பார்க்க வைக்கிறார் . பல இடத்தில் ரஜினி பேசும் வசனத்திற்கு திரையரங்கில் கைத்தட்டல் வாங்குகிறார் . இதில் துஷாரா விஜயன் பள்ளிக்கூட ஆசிரியராக நடித்துள்ளார். அவரை சுற்றித்தான் கதையே நகர்கிறது. ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளனர் சில காட்கள் மட்டும் வருவார். ரித்திகா சிங்கும் தனது கதாபாத்திரம் சிறப்பக உணர்ந்து நடித்துள்ளார்.ரஜினியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக ஃபஹத் ஃபாசில் சுவாரஸ்யம் அவருடை காட்சிகள் வரும் போது கைதட்டல் வாங்குகிறார் . கார்ப்பரேட் வில்லனுக்கான தோற்றமும் தோரணையைம் சரியாக வெளிப்படுத்துகிறார் ராணா டகுபதி .
அனிருத் இசை
பாடல்கள் முதல் பாடல் மலையாளம் வாசம் வீசும் அவ்வளவா மனதில் இடம் பிடிக்கவில்லை பின்னனி இசை கூடுதல்பலம்.
ஒளிபதிவு :எஸ்.ஆர்.கதிர் சிறப்பான ஒளி ஓவியம்
எடிட்டர் : அன்பறிவ் சரியாக நேர்த்தியான காட்சிகள் ஒன்று சேர்த்தல்
மற்றும் இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பு
தர்பார் / ஜெயிலர் /வேட்டையன் . துப்பாக்கி சுடும் போட்டியாளராக இருந்தார். இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், துப்பாக்கி வைத்து இருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை படத்தின் இயக்குநர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதே போல படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்புடன் நகர்ந்து செல்கிறது இந்த வேட்டையன் படம் நல்ல படம் தான். என்கவுன்ட்டருக்கு எதிரான கருத்துக்களையும், கல்வியில் நடக்கும் மாஃபியாவையும் அழகாக எடுத்து சொல்லி ஒரு தரமான படத்தை ஞானவேல் கொடுத்துள்ளார் .










