
ஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம்.
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்கியிருக்கிறது
செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் சித் ஆகவும், பாடினி குமார் சோஃபியாவாகவும் நடித்துள்ளனர்.
வெப் சீரிஸ் பார்ப்போம்:
நம் உடலில் உள்ள நோய்கள் மற்றும் நாம் , பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என கருவிகள் வந்துள்ளன நாம் அறிந்தது அதேபோல் ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என்ற கேள்வி எழுகிறது அந்த கேள்விக்கான பதிலாக கதாநாயகி சோபியா லவ் மீட்டர் என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள் காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? பொய்யாக பழகுகிறார்களா? என்பதை சொல்லிவிடும் அதை வைத்து ஒரு சில காதல் ஜோடிகளை சோதித்துப் பார்க்க அதனால் கிடைக்கிற அனுபவங்கள் ஏடாகூடமாக இருக்கிறது இந்த சூழ்நிலையில் நாயகன் குரு லக்ஷ்மன், அவரது கருவி பற்றி அறிந்து அதை கிண்டல் செய்வதோடு, அந்த கருவியால் ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டுபிடிக்க முடியாது, என்பதை நிரூபித்து காட்டுவதோடு, நாயகியை காதலிக்க வைப்பதாகவும், சவால் விடுகிறார். இந்த சவாலில் நாயகன் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது .பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த வேப் சீரிஸின மீதிக்கதை..
கதிநாயகனாக குரு லெஷ்மண் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக பாடினி குமார் கொடுத்த கதாபாத்தரத்தை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகன் தந்தையாக ஜீவாரவி
மற்றும் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். கூலி சௌந்தரராஜனின் ஓளிப்பதிவு தொடருக்கு பெரிய பலம். மைக்கேள் ஆகாஷின் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமான முயற்சியாக , லவ் மிஷினை வைத்து அறிவியலும் காதலும் கலந்து நல்ல வெப் சீரிஸை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.










