
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர்.தயாரித்திருக்கும் ஆல்பாஸ் படத்தின் கதை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கியிருக்கிறார் மைதீன்.
இதில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -(கார்த்திக்), ஜனனி – (பிரியா), ஜெயப்பிரகாஷ் – (அழகர்), செந்திகுமாரி சாந்தி), இயக்குநர் சுப்பிரமணிய சிவா (செல்வம்), வினோதினி – (லட்சுமி), பிரசன்ன பாலச்சந்திரன், – (மாணிக்கம்) , மோகனா.ஆர் – (கீதா),சத்யா – (கவுன்சிலர் கர்ணா), சஞ்சய் – (கதிர்), கோகுல் – (அருண்), நிகில் – (மதன்), சரத் லோகித்ஷவா – (எம் எல் ஏ ஆவுடையப்பன்), ரோஷன் பஷீர் – (பார்த்திபன்), அருவி மதன்- (இன்ஸ்பெக்டர் வேலு), இயக்குநர் மூர்த்தி (லோகு), கலையரசன் கண்ணுசாமி (கோபால்) மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்தை பார்ப்போம்:
வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும் சகோதர்களாக பழகுகிறார்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும் ஒற்றுமையாக இருப்பதோடு, பசங்க ஜெயப்பிரகாஷை தங்களது பெரியப்பாவாக நினைத்து அவர் சொல்படி கேட்டு நடக்கிறார்கள்.மூன்று பசங்க தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெரிய கனவு ! பசங்க கிரிக்கெட் விளையாட போன இடத்தில் பணம் 5 ஐந்து கோடி பெட்டியில் கிடைக்கிறது அப்படியே இந்த பணத்தை ஜெயப்பிரகாஷை வீட்டுக்கு கொண்டு வந்து பசங்க கொடுக்கிறாங்க இந்த பணம் நமக்கு வேண்டாம் எடுத்த இடத்திலே வைத்துவிடு என்று கூற இவரை தவிர மற்றவர்கள் அனைவரும் பணம் நமக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள் அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷையிடம் ஒரு சத்தியவாக்கு வாங்குகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த தொகுதி எம் எல் ஏ பணம் காணவில்லை யென்று தன் கட்சி கவுன்சிலரிடம் அடியாட்கள் வைத்து தேட ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகாஷை தவிர மூன்று குடும்பமும் பணத்தை செலவு செய்ய துடிக்கிறார்கள்
இந்த சூழ்நிலையில் பணத்தை பறிகொடுத்த எம். எல். ஏ வார்டு கவுன்சிலருடன் அந்த ஹவுசிங் போர்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் செக் பண்ணுகின்றனர். ஒரு கட்டத்தில் மூன்று குடும்பமும் சண்டையிட்டு பிரித்துக்கொள்கின்றனர்.
இதன்பிறகு பங்கு பிரித்த பணத்தை வைத்து நன்றாக வாழ்ந்தார்களா?
ஐந்து கோடி ரூபாய் இறுதியில் ஏம். எல். ஏவிடம் கிடைத்ததா? பணத்தால் பிரிந்த மூன்று குடும்பங்கள் மீண்டும் ஒன்றானார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,
ஜனனி காதலர்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜெயப்பிரகாஷ்,
செந்திகுமாரி,
இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி,
பிரசன்ன பாலச்சந்திரன்,
மோகனா,ஆர், இவர்கள் மூன்று குடும்பமாக நடிந்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
சத்யா, சஞ்சய்
கோகுல், நிகில்,
சரத் லோகித்ஷவா,
ரோஷன் பஷீர்,
அருவி மதன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு அழகாக செய்துள்ளார்.
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . பாடல்களும் பிணாணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். அழகான வரிகள்.
‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். ஏடிடாடிங் ஷார்ப். கலை இயக்குநராக ஜெயசீலன்.T அழகாக பணியாற்றியுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் I.ராதிகா அழகாக நடனம் அமைத்துள்ளார்.
சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அருமையாக கொடுத்துள்ளார்.
சாதாரண குடும்பங்களின் வாழ்க்கையில் திடீரென கோடிக்கணக்கான பணம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மைதீன்
எல்லோரும் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதையை படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் மைதீன்.
குடும்பத்தினருடன் பார்க்கவேண்டிய படம்.
ரேட்டிங் 4:0










