Sunday, May 31

” Mask”மாஸ்க் திரை விமர்சனம்.

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்  சார்பில் ஆண்ட்ரியா ஜெரிமையா – சொக்கலிங்கம்  தயாரித்திருக்கும் மாஸ்க் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக்.

இதில் கவின் , ஆண்ட்ரியா ஜெரிமியா, ருஹாணி ஷர்மா , சார்லி , ரமேஷ் திலக் , கல்லூரி வினோத் , அர்ச்சனா சந்தோக் , ரெடின் கிங்ஸ்லீ, பவன், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்கலைஞர்கள் :-

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: ராஜசேகர் , படத்தொகுப்பு: ராமர் , கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன் , பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி , நடன அமைப்பு: அசார், விஜி  ,சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி , ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்​

படத்தை பார்ப்போம்:

மாஸ்க் கதை: அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பாலியல் தொல்லை  பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் அமைப்பு நடத்தும்    பூமியிடம் (ஆண்ட்ரியா)  ஒப்படைக்கிறார்கள் பூமி வெளி உலகிற்க்கு நல்லவளாக இருந்து கொண்டு அரசியல்வாதி மணிவண்ணக்கு (பவன்) மறைமுகமாக உதவி செய்கிறாள்   பெண் மாமாவாக தொழில் செய்கிறாள் (நான் சிரித்தால் தீபாவளி பாடல் அடிக்கடி ஒலிக்கும்  ) பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைத்து பணம் பட்டுவாடா பண்ணுவதற்கு தயார் நிலையில், இருக்கும் நிலையில், எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த ஒரு கும்பல்  சூப்பர் மார்கெட் -யில் நுழைந்து வேலையாட்கள்  , பொதுமக்களையும்  துப்பாக்கி முனையில் மிரட்டி அங்கிருந்த ரூ 440 கோடி பணத்தை திருடுகிறது. இந்த திருட்டை கண்டுபிடிக்க  டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் கவின் யிடம் வருகிறது அதே நேரத்தில்  வட இந்திய பெண் கள்ளகாதலி வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் கிடைத்த பணம் பை Bag     தன் வீட்டில் பதுக்கி வைக்கிறார்  அதில் பலகோடி பணம் இருக்கிறது  கவின்  எப்படி இந்த வலையில் சிக்குகிறான். கள்ளகாதலி வீட்டில் எப்படி இவ்வளவு பணம் யாருடையது எல்லா பிரச்சனைகளும் சரி செய்தாரா? இல்லையா? என்பது தான் இந்த மாஸ்க் படத்தின் மீதிகதை…

ஹீரோவாக நடித்திருந்திருக்கும்   கவின். காமெடி கலந்த, கொஞ்சம் வில்லத்தனம் கலந்த அந்த நடிப்பு அவருக்கு சூட் ஆகி இருக்கிறது. குறிப்பாக, அடுத்தவன் மனைவி வட இந்திய பெண்ணிடம்  பதம்பார்க் எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பு. ரசிக்கும்படியாக இருந்தது அதேபோல் ஆண்ட்ரியாவுடனான மோதல் சீன்களிலும் கவின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது.

ஆண்ட்ரியா கதாபாத்திரம் வில்லத்தனம  வில்லியாக  வித்தியாசம் சிறப்பாக  நடித்துள்ளார்

பவன் அரசியல் தலைவராக கூத்து கும்மாளம் அசத்திருக்கிறார்.

சார்லி இப்படத்தில் வழக்கமான கதாபாத்திரம் இல்லை அமைதி புயலாக நடித்துள்ளார்

அர்ச்சனா சந்தோக் , ரெடின் கிங்ஸ்லீ,  ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி மற்றும் பலர்  சில காட்சிகள் வந்தாலும் நினைவில் நிற்கிறார்கள்

ஒளிப்பதிவு: ராஜசேகர், ஒளிவீச்சு பதிவு சிறப்பாக இருந்தது :

எடிட்டர் ராமர் படத்திற்க்கு தேவையான  காட்சிகள் சேர்த்துள்ளார்

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அவ்வளவாக நினைவில் நீற்க வில்லை இரவின் ஆட்டம் இன்னும் பெட்டராக கொடுத்திருக்கலாம் பின்னனி இசை படத்திற்கு பெரிய  பலம் .

படத்தில் சில குறைகள் இருந்தாலும்,கடைசி  வரை என்ன நடக்கும் படம் எப்படி முடியும் யார் அந்த மாஸ்க் மேன் என்கிற ஆர்வம் படத்தை 20 – நிமிடம்  பக்கா என பாராட்ட வைக்கிறது.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக்., திரைக்கதை இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது, சில இடங்களில் குழப்பமாக இருந்ததால், சற்று சலிப்பு ஏற்படுகிறது. உங்கள் முயற்ச்சி பாராட்டு