Sunday, October 11

“கிட்டி”திரை விமர்சனம்.

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்திருக்கும் கிட்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ்.

நடிகர்:விஜய் – அசோக், போலீஸ் – யுகன், ராஜபாண்டியன் – திருமாறன் மோகன்தாஸ், ராஜா – அர்ஜூனா துரைசாமி, பூஜா – நிஷா இஸ்மத், மஹா – சங்கவி தர்மராஜ், ஒய். ஜி. மகேந்திரன் – நீதிபதி, டாக்டர் அரவிந்த்ராஜ் – அரவிந்த்ராஜ், கடலூர் சிவா – சிவா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:- இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம் சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்திபாண்டியன்  மக்கள் தொடர்பு: சரண்.

படத்தின் ஆரம்பத்திலே இரு கொலை! அதைச் செய்தது யார் என்ற இன்வென்ஸ்டிகேசன் நடக்கிறது. திடீரென கதாநாயகன் அசோக், “நான் தான் இரண்டு கொலையைச் செய்தேன்” என்று போலீஸில் சரண்டராகிறார். விசாரனையை போலீஸ் தொடங்குகிறது அசோக் தான் கொலையாளியா? ..அதற்கான காரணம் என்ன?  பல திருப்பங்களுடன் என்பதாக படத்தின் மீதிகதை..

கதாநாயகனாக காதல், கோபம், விரக்தி என பல பரிணாமங்களை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் அசோக். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திருமாறன் மோகன்தாஸ் வெகு இயல்பாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக சங்கவி, நிஷா நடிப்பம் அருமை. டாக்டராக அரவிந்த்ராஜ், நீதிபதியாக YG மகேந்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
காதரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு அருமை.
ராக் சங்கரின் நடனம் கார்த்திக் பாண்டியனின் எடிட்டிங்
‘பாப்புலர்’ பாபுவின் ஸ்டன்ட், ப்ரியன், சீர்காழி சிற்பி,
தமிழ்மகன் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது.

குறைந்த பட்ஜெட்
வித்தியாசமான கதை  திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ். எடுத்துக்கொண்ட காதல் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி புரியும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார்.வித்தியாசமான கதை விருப்பம் Specifications விருந்து படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். இப்படம் அனைவரும் பார்க்கலாம்

ரேட்டிங் 3:5