Sunday, October 11

“லெனின் பாண்டியன்”திரை விமர்சனம்.

நடிகர்கள்:- கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

எழுத்து – இயக்கம்: டி.டி. பாலச்சந்திரன்

இசை: ‘இசைஞானி’ இளையராஜா

ஒளிப்பதிவு: ஏ.எம். எட்வின் சகாய்

எடிட்டர்:நாகூரான் ராமச்சந்திரன்

கலை இயக்கம்: அதூரி ஜெய்குமார்

சண்டைப்பயிற்சி: ‘கலைமாமணி’ தளபதி தினேஷ்

நடனப் பயிற்சி: விஜி சதீஷ்

பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, ‘இசைஞானி’ இளையராஜா

மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்)

தயாரிப்பு நிறுவனம்: சத்யஜோதி ஃபிலிம்ஸ்

வழங்குபவர்: டி.ஜி. தியாகராஜன்

தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

இணைத் தயாரிப்பாளர்கள்: ஜி. சரவணன், சாய் சித்தார்த்.

படத்தைபார்ப்போம்;

கிராமத்தில் வசிக்கும் கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் ஆசையாக  செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின் லாரியில் சிக்கி கொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் கங்கை அமரனை போலீசார் விரட்டியடிக்கின்றனர். இதையடுத்து, ஊரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.இதனால் அவரது உயிருக்கு ஆபத்து வர, அவருடைய பாதுகாப்புக்காக ஒரு போலீஸ்காரரை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. மணல் கொள்ளையர்களால் கங்கைஅமரனுக்கு ஆபத்து வந்ததா? இல்லையா? :கங்கை அமரனை உடன் இருக்கும் காவலர் காப்பாற்றினாரா? இல்லையா? முடிவில் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

நடிகர்களின் பங்களிப்பு :கதையின் நாயகனாக விவசாயியாக வாழ்ந்து யிருக்கிறார் கங்கை அமரன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு  மனைவியாக நீண்ட இடைவெளி பிறகு மீண்டும் ரோஜா செல்வமணி கதாபாத்திரம் உணர்ந்து கிளைமாக்ஸ சிறப்பாக நடித்துள்ளார். காவலர் வேடத்தில் நடிகர்  திலகம் சிவாஜிகணேசன் குடும்பவாரிசு  தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக ஆடுகளம் நரேன், யுகேந்திரன் நடிப்பில் மிரட்டியுள்ளார்கள். நீதிபதியாக ஜார்ஜ் மரியன் வரும் சீன்கள் தியேட்டரில் கைதட்டல் அனைவரின் கவனத்தையும் பெறும் ஷ்ரீதா ராவ், போஸ் வெங்கட், அர்ச்சனா, சுப்பு பஞ்சு என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவும அருமை.

மணல் கொள்ளையை மையமாக வைத்து சமூகப் பிரச்சனையையும், ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் இணைத்து இயக்குநர் பாலச்சந்திரன் முதல் பாதியை ரசிக்கவைத்தவர் இரண்டாம் பாதியும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பட வேறலெவல் ! எனிவே முதல் படத்தில் சமூக அக்கறை  உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தமிழ்திரையுலகம் வரவேற்பு

படம் அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் :4:०