Monday, October 12

“மீசைய முறுக்கு 2” திரை விமர்சனம்.

அவ்னி மூவீஸ் – பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்திருக்கும் மீசைய முறுக்கு 2 படத்தின் இசை, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

நடிகர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன், பாபா பாஸ்கர், விஜய் வரதராஜ், யோகி பாபு, பகவதி பெருமாள், ஷா ரா, சபரீஷ் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இசை: ஹிப்ஹாப் தமிழா, படத்தொகுப்பு: பென்னி ஒலிவர், ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம், கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார், நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (எஸ்2 மீடியா)

கதைகரு:மூன்று தலைமுறையாக கானா இசை  கலைஞன் திரைஇசை துறையில் கால்பதிக்க போராடும் ஒரு போராளியின் கதை.

படத்தை பார்ப்போம்:

வட சென்னையை பின்னணியாக கொண்டு, மூன்று தலைமுறை கானா இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மையமாக கதை உருவாகி உள்ளது

ஹிப் ஹாப் ஆதி 1970-களில் கர்நாடக சங்கீதமி அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்ய, ஆதி தன் கானா மூலம் மிகப்பெரிய கலைஞன் ஆக போராட், ஆனால் அனைத்து இடங்களிலும் கானாவை ஒதுக்குகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஆளும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது. பண, புகழ், செல்வந்தர்களுடன் நட்பு பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா ? இல்லையா ? பல திருபங்களுடன் படத்தின் மீதிகதை..

ஹிப் ஹாப் தமிழா ஆதி பல பரிமாணங்களில் ஆடி பாடி பாடல்கள் எழுதி இசையமைத்து மற்றும் மூன்று காலகட்டத்தில் தோன்றும் கதாபாத்திரத்தில் காதல்,கோபம்,லட்சியம் தவிப்பு  அனைத்திலும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

சைத்ரா குறுகிய நேரமே வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். கெத்திகா பெரும்பாலும் நகைச்சுவை, கிளாமருக்காக பயன்படுத்தபப்ட்டிருக்கிறார்.
ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் படத்தில் வலுவாக இருந்தது.
இவர்களுடன் நண்பனாக ஹர்ஷத் கான், யோகிபாபு, ஆதியின் தந்தையாக பாபா பாஸ்கர், மற்றும் கருணாஸ், நாசர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் ஓளிப்பதிவும் அருமை.

முதல் பாதி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சத்தம் அதிகம் இருப்பதால் நமக்கு கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது  .இரண்டாம் பாதியின் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார் இந்த படம் இசை குறித்த படம் என்பதால்  பாடல்கள் அதிகம் அமைந்திருக்கின்றன. கேமரா, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு என அவரவர் தங்களது பணிகளை சிறப்பாக சரியாக கொடுத்துள்ளனர்

இயக்குநர் ஹிப் ஹாப் ஆதி.
படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5