Sunday, October 11

“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஐவிஒய் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சுதாகர் செருக்குரி, இஷான் சக்சேனா தயாரித்திருக்கும் தி பாரடைஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா

நடிகர்கள் ; நானி, காயடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, தனிகெல்லா பரண​p, ஈஸ்வரி ராவ், கீர்த்தி சுரேஷ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட் கலைஞர்கள்:-இசை: அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு: சி. ஹெச். சாய்,  எடிட்டர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு: கொல்லா அவினாஷ், சண்டைப் பயிற்சி: ராம்-லக்ஷ்மண், ரியல் சதீஷ், மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்எஸ்2மீடியா)

படத்தை பார்ப்போம் பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள ‘பாரடைஸ்’ பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.சுதந்திரத்திற்குப் பிறகும் அடிப்படை குடியுரிமை, அடையாளச் சான்று மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, அதே பகுதியில்,குப்பை மேடுகளுக்கு நடுவே ஒடுக்கப்பட்டு வாழும் ‘சவாரி’ என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவன் ஹீரோ  சடையன் (நானி).பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய ‘சவாரி’ பழங்குடியின மக்கள்  குடியுரிமைக்காக நானி அம்மா சம்மக்கா (சோனாலி குல்கர்னி) தலைமையில் போராடி வருகின்றனர். , ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தனது தாய் சம்மக்கா மீது ஹீரோ நானி  வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். சிறு வயதிலேயே மாலிக் குடும்பத்தை எதிர்த்து நானி  சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.பாரடைஸ் பகுதியில் சிகஞ்சி மாலிக் குடும்பத்தின் அராஜகங்கள் எவ்வாறு தொடர்ந்தன? அப்பகுதி மக்கள் மீது மாலிக் தரப்பினர் நடத்திய அடக்குமுறைகள் என்னென்ன? சம்மக்காவின் போராட்டத்தை மாலிக் தரப்பு எவ்வாறு ஒடுக்க முயன்றது? ஜடல் எந்த மாதிரியான சூழ்நிலையில் பிறந்தான்? அவனுக்கு ‘ஜடல் ஜமானா’ என்று ஏன் பெயரிடப்பட்டது? தன் தாய் மீது ஜடல் வெறுப்பு கொள்ளக் காரணம் என்ன?  சுப்பலட்சுமி என்கிற சுப்புவுடன் (கயாடு லோஹர்) அவனுக்கு ஏற்பட்ட காதல் என்ன ஆனது? தாயுடன் ஜடல் இணைந்தானா? பாரடைஸ் பகுதியில் சவாரி மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா?  பல திருபங்களுடன் படத்தின் மீதிக்கதை

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக நானி வித்தியாசமாக ஜடை ஹேர் ஸ்டைல் எல்லாம் போட்டுக் கொண்டு ஜடல் எனும் கதாபாத்திரத்தில் ஆக்க்ஷன் தூள் சிறப்பாக நடித்துள்ளார்.
கயாடு லோஹர் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆபாச பட நடிகையாக வந்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். நடிப்பும் அருமை.நானியின் தாய் கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி போராளியாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வில்லனாக மோகன்பாபு மிரட்டியுள்ளார். அனிருத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார்.ஓளிப்பதிவும் செம சூப்பர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கதையை இன்னமும் திரைக்கதையில் சுவாராஸ்யப்படுத்தி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தில் வெட்டு ,குத்து, ஒரே வெட்டு உடல் பாகம் இரண்டு துண்டாக, இரத்தம் தெறிக்கும் நிறைந்த காட்சிகள்

மொத்தத்தில் சிறியவர்கள், இதயநோய், உடல் நலக்குறைவு தவிர்க்கவும்.

ரேட்டிங் 3:0