
நடிகர்கள் :-நாயகன் – ஆர்.ஜே.பி, நாயகி – கேத்தி,வில்லன் – செந்தில், நாயகன் (தாத்தா |பவுன்ராஜ், நாயகி அப்பா – அனந்த் ராம்,நாயகி அம்மா – கலாவதி நண்பர்கள் – சபி, ஜிவி
தொழில்நுட்ப குழு விபரம்:-
தயாரிப்பு: ஆர்.ஜே.பி மீடியா, தயாரிப்பாளர்: கலாரவி, எழுத்து மற்றும் இயக்கம் : ஆர்.ஜே.பி, இசை: சங்கர் ராம், ஒளிப்பதிவு : செல்வகுமார்,எடிட்டர்: வளர்பாண்டி பாடலாசிரியர்: கவிகண்ணண் மக்கள் தொடர்பு : சரண்
படத்தை பார்ப்போம்!;
கதாநாயகன் RJP பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த இளைஞன் (சிவா) தாய், தந்தை இழந்து தனது தாத்தா பாதுகாப்பில் வளர்கிறார். கல்லூரி படிக்கிறார் ண்பர்களுடன் கல்லலூரியில் நண்பர்களுடன் ஜாலியாக சந்தோஷமாக சுற்றி வருகிறார் . கதநாயகி கேத்தா அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேர வரும் போது இவர்களுக்குள் ராகிங் என்ற பெயரில் மோதல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்தாலும் பின் இருவருக்கும் காதல் உருவாகிறது.
இவர்கள் சேர ஜாதி தடையாக இருக்கிறது. கதாநாயகின் அப்பாவுக்கு இவர்கள் காதல் தெரிய வர மகளுக்கு உறவுகாரர் பையனை நிச்சயம் செய்கிறார். பின் காதலர்கள் ஊரைவிட்டு ஓட பஸ் பயணம் தயாராக இருக்கும் நிலையில் வில்லன் செந்தில் அவர்களை கண்டுபிடித்து தாக்க அந்த பகுதியில் பாதுகாப்பு இருந்த போலீஸ் அவர்களை அழைத்து வந்து ஸ்டேஷனில் காதலர்களின் அப்பா,அம்மா,உறவினர்கள் வரவழவைத்து விசாரிக்க போலீஸ் திவ்யாவின் பொற்றோரிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சமாதானம் பேசி சம்மதிக்க வைக்கிறார்கள். மேலும் திவ்யாவின் பொற்றோரை எச்சரித்து திவ்யாவை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள்.அதன் பிறகு அவர்கள் காதல் நிறைவேறியதா? முடிவு என்ன என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் மேக்கப் இல்லாத எதார்த்தமாக கிராமத்து இளைஞனாக இறுதிக்காட்சியில் , நடிப்பும் பார்வையாளர்களை அனைவரையும் கவனிக்க வைத்தது..சிறப்பாக நடித்துள்ளர் .
படத்தின் நாயகியாக வரும் கேத்தி தான். திவ்யா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக தன் நடிப்பை வழங்கியுள்ளார்.மற்றும் நாயகனின் தாத்தாவாக: பவுன்ராஜ், செந்தில் (வில்லன்), அனந்த் ராம் (நாயகி அப்பா), கலாவதி (நாயகி அம்மா), நண்பர்களாக சபி, மற்றும் ஜிவி உட்பட அனைவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளார்
இசையமைப்பாளர் சங்கர் ராம் தேவையற்ற சத்தங்கள் இன்றி, கதைக்குத் தேவையான இடங்களில் மென்மையான பின்னணி இசையை வழங்கியுள்ளார்
ஒளிப்பதிவாளர் செல்வகுமார். பட்ஜெட் படத்திற்க்கு சிறப்பான பங்களிப்பை .வழங்கியுள்ளார்
எடிட்டர் :வளர்பாண்டி படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்
இதுவரை ஆணவ கொலை கொடுமை பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் :அறிமுக இயக்குநராக ஆர்.ஜே.பி அவர்கள் தேர்வு செய்துள்ள கதை சாதி .வெறியர்களின் கொடுமைகளை நேர்த்தியாக தைரியமாக சொல்லியுள்ளார் உங்கள் முயற்ச்சி பாராட்டு வாழ்த்துக்கள்










