
ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயிண்மென்ட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சார்பில் தினேஷ் ராஜ், ஜி தனஞ்செயன் தயாரித்திருக்கும் லவ் ஓ லவ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் ராஜேந்திரன்.
இதில் ராஜேந்திரனாக கே.எஸ்.ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரனாக செல்வராகவன், லேகாவாக வனிதா, ரகுவரனாக பவிஷ் நாராயண், அவந்திகாவாக நாகதுர்கா , ரம்யா ராதிகாவாக, சாந்தியாக சௌந்தர்யா , மாறனாக கதிர், டாட்டூவாக அஸ்வத், ஆதித்யா கதிர் மற்றும் பலர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இசை: ஃபாக்ஸ்ன், ஒளிப்பதிவு இயக்குனர்: பி.ஜி. முத்தையா ,படத்தொகுப்பாளர்: என்.பி. ஸ்ரீPகாந்த் , கலை இயக்குனர் : பா.மகேந்திரன், சண்டைக்காட்சி: அபிஷேக் ஸ்ரீPனிவாஸ், , பிஆர்ஓ: ரேகா
படத்தை பார்ப்போம் :
ஹீரோ பவிஷ் படத்தின் நாயகி நாக துர்கா காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலீஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்க தலைவி வனிதா விஜய்குமார் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறுகிறார் .நடந்தை பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார் காதலி நாக துர்கா பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார்.ஒரு கட்டத்தில் காதலி ஆசையாக கேட்கும் பொருட்கள் வாங்கி கொடுப்பது பணத்திற்கு வேலை பார்க்கும் ஆபீஸில் நண்பர்கள், கிரெடிட் கார்டு ,லோன் இப்படி பல இடங்களில் இதுவரை செய்த செலவு ரூ 15 லட்சம் கடன்காரன் டார்ச்சர் இவளாள் வேலை ,குடும்பம் மானம் மரியாதை பறிபோனது குடும்பம் பிரிந்தது நாயகனின் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது என்பதே கதை கூறுகிறார் பிறகு காதலியிடமிருந்து விவகாரத்து கேட்கிறார் காதலி தர மறுக்கிறார் நாயகன் இன்னொரு வாய்ப்பு தருகிறார் நாயகி ஒரு நான்கு மாத சவாலை முன்வைக்கிறார். இந்த சவாலில் காதலி வெற்றி பெற்று, காதலைக் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதே பலதிருபங்களுடன் படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம். நடனம் மற்றும் பொறுப்பில்லாமல் இருக்கும் காதலி மீது கோபப்படும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி யுள்ளார் பல இடங்களில் தனுஷின் சாயலை பார்க்க முடிகிறது இருந்தாலும் இன்னும் நடிப்பு பயிற்சி தேவை
புதுமுக நடிகை நாக துர்கா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருக்கிறார்.இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவரக்கூடிய நாயகியாக இல்லை.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நாயகனுக்கு பொறுப்பான தந்தையாக சிறப்பாகவும் , போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன் காதல் தூதராக , மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் தூள் கிளம்புகிறார் அனைவரும் சிறப்பான நடிப்பால் கவருகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இசை: ஃபாக்ஸ்ன்,பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும் வகையிலும் இல்லை.
எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் காட்சிகளை கவனமாக தொகுத்து படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்துள்ளார்
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற காதல் படமாக இயக்கியிருகிறார்.உங்கள் முயற்சி பாராட்டு
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ வயது வந்த அனைவரும் பார்க்க கூடிய காதல் படம்.
ரேட்டிங் 3;5










